சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கான வேலைவாய்ப்பு திருவிழா (ஆவடி, சென்னை மற்றும் சிவகங்கை)

Posted On: 23 DEC 2024 4:20PM by PIB Chennai

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மனிதவளத்தை வலுப்படுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் வேலைவாய்ப்பு திருவிழா  தொடங்கப்பட்டது. மத்திய  அரசின் பல்வேறு துறைகள் / அமைச்சகங்களில் 10 லட்சம் இளைஞர்களை சேர்ப்பதே இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் நோக்கம் ஆகும். வேலைவாய்ப்பு திருவிழா தொகுதி –14-ல்      71,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு "இந்தியா முழுவதும்" (23-12-2024 அன்று)  குழு, சிஆர்பிஇ, ஆவடி உட்பட 45 மையங்களில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, வேலைவாய்ப்பு திருவிழா தொகுதி-14, 23-12-2024 தேதி அன்று காலை 08.30 மணிக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் குழு மையத்தில் நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஒட்டுமொத்தமாக 413 விண்ணப்பதாரர்கள் தங்களது  பெற்றோர்களுடன் பங்கேற்றனர். பணிக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய இணையமைச்சர், அவர்களுக்கு பணிநியமனக் கடிதங்களை வழங்கி ஊக்குவித்தார்.  வேலைவாய்ப்பு முகாமில் காணொலி மூலம் கலந்து கொள்ள இயலாத விண்ணப்பதாரர்களுக்கு இணையதள இணைப்பும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் ஆவடி குழு மையத்தின் டி.ஐ.ஜி.பி திரு ராஜீவ் ரஞ்சன், முகாமில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பிற அதிகாரிகள், சி.ஏ.பி.எஃப் மற்றும் பிற அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

வேலைவாய்ப்பு திருவிழாவின் – 2-வது கட்டம் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.  இந்த விழாவில் சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, தபால் அலுவலகம், டிஎஃப்எஸ், இந்திய ரயில்வே போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 45-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவின் போது, புதிதாக  பணி நியமனம் பெற்றவர்களுக்கு  மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா பணி நியமனக் கடிதங்களை  வழங்கினார்.

 

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் நிலையத்தின் டிஐஜி திரு அச்சல் சர்மா, தலைமை விருந்தினரையும் இதர பிரமுகர்களையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டனர்.

காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர், இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக அவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களின் தொகுப்பிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  உரையாற்றிய மத்திய  எஃகு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு  பூபதிராஜு சீனிவாச வர்மா, புதிய நியமிக்கப்பட்டவர்கள் தங்களது புதுமையான யோசனைகள், திறன்களுடன், பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க உதவுவதன் மூலம் நாட்டின் தொழில், பொருளாதார, சமூக வளர்ச்சியை வலுப்படுத்தும் பணியில் பங்களிப்பார்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், பார்வையாளர்களை வரவேற்ற டிஐஜி திரு அச்சல் சர்மா, நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்பு திருவிழா எடுத்துக்காட்டுவதாக கூறினார். நாட்டை கட்டமைப்பதில்  பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும் என்று கூறினார். இறுதியாக கமாண்டன்ட் (டி.ஆர்.ஜி) திரு.சுனில்குமார் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

 

***

SRI/SV/AG/RR


(Release ID: 2087287) Visitor Counter : 90


Read this release in: English