பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கிராமங்களை நோக்கி நிர்வாகம் என்னும் பிரச்சாரத்தை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை இன்று தொடங்கியது
Posted On:
19 DEC 2024 5:26PM by PIB Chennai
நல்லாட்சி வார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிராமங்களை நோக்கி நிர்வாகம் என்னும் பிரச்சாரத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை இன்று தொடங்கியது. பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாடு தழுவிய பிரச்சாரம் டிசம்பர் 19 முதல் 24 வரை இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும்.
நல்லாட்சி வாரம் குறித்த தமது வாழ்த்துச் செய்தியில், “ கிராமங்களை நோக்கி நிர்வாகம் பிரச்சாரம் நல்லாட்சி வாரத்தின் முக்கிய அங்கமாகத் தொடர்கிறது என பிரதமர் கூறியுள்ளார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பயனுள்ள நிர்வாகத்தை கிராமப்புற மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உருமாற்ற முயற்சியாகும். இது அடிமட்ட ஜனநாயகத்தின் உண்மையான சாரம், அங்கு வளர்ச்சி மக்களை சென்றடைகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்யபடும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, https://darpgapps.nic.in/GGW24 என்ற பிரத்யேக இணையதளம் செயல்படத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 19 முதல் 24, 2024 வரையில் மேற்கொள்ளப்படும் கிராமங்களை நோக்கி நிர்வாகம் பிரச்சாரத்தின் போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும்:
டிசம்பர் 23, 2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நல்லாட்சி நடைமுறைகள் குறித்த பயிலரங்கம் நடத்தப்படும்.
நல்லாட்சி வாரம் 2024 இன் ஒரு பகுதியாக, புது தில்லி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தேசிய அளவிலான பயிலரங்கம் புதுதில்லி டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அன்றைய தினம் நடைபெறும்.
***
TS/PKV/DL
(Release ID: 2086269)
Visitor Counter : 10