சுற்றுலா அமைச்சகம்
பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை
Posted On:
19 DEC 2024 3:56PM by PIB Chennai
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024 அறிக்கையின்படி, 119 நாடுகளில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய குறியீட்டில், இந்தியா 54 வது இடத்தில் இருந்தது.
'உள்நாட்டு சுற்றுலா', புனித யாத்திரை, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க இயக்கத்திற்கான தேசிய இயக்கம், சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய முகமைகளுக்கு உதவி ஆகிய திட்டங்களின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் மருத்துவ சுற்றுலாவுக்கான நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு அது தொடர்பான தகவல்கள் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு, சுகாதார சேவைகளை விரும்பும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் www.healinindia.gov.in என்ற இணைய தளத்தில் அதுதொடர்பான தகவல்களை பார்வையிட வகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086019
***
TS/SV/KV/DL
(Release ID: 2086144)
Visitor Counter : 20