புவி அறிவியல் அமைச்சகம்
நீலப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்
Posted On:
18 DEC 2024 5:10PM by PIB Chennai
புவி அறிவியல் அமைச்சகம் தேசிய பருவமழை இயக்கம், வானிலை இயக்கம், ஆழ்கடல் இயக்கம் ஆகியவற்றை முறையே 2012, 2024,2021-ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தியது. இவை நாட்டில் நீலப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றன.
தேசிய பருவமழை இயக்கம் நாடு முழுவதும் செயல்பாட்டு பருவமழை முன்னறிவிப்பு திறனை மேம்படுத்துவதையும், விவசாயம், நீரியல், மின் துறைகளுக்கு உதவுவதையும், நோக்கமாகக் கொண்டுள்ளது.
வானிலை இயக்கம் இந்தியாவின் வானிலை தொடர்பான அறிவியல், ஆராய்ச்சி, சேவைகளை மேம்படுத்துவதற்கான பன்முக முயற்சியாக இருக்கும்.
ஆழ்கடல் இயக்கம் என்பது பல அமைச்சகங்கள் சார்ந்த, பல்துறை திட்டமாகும், இது நீல பொருளாதாரத்தை ஊக்குவிப்பதையும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மூலம் நீலப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவுகின்றன. மீன்வளம், சுற்றுலா, கடல்சார் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளர்ப்பு, கடற்படுகை வள ஆய்வு நடவடிக்கைகள், கடல்சார் உயிரி தொழில்நுட்பம் போன்ற நீலப் பொருளாதாரத்தின் அம்சங்களுக்கு ஆழ்கடல் இயக்கத்தின் செயல்பாடுகள் உதவும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2085795)
Visitor Counter : 24