சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலக செஸ் சாம்பியன் திரு குகேஷ் தொம்மராஜூக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
Posted On:
16 DEC 2024 2:45PM by PIB Chennai
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பட்டம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் திரு குகேஷ் தொம்மராஜூக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியின் கேரள பிராந்திய முதல்வரும், மண்டல இயக்குநருமான டாக்டர் ஜி கிஷோர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு ஜெ மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
***
AD/IR/AG/RR
(Release ID: 2084767)
Visitor Counter : 38