சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சியில் வரலாற்று சாதனைகள் மோடி அரசின் 10 ஆண்டுகளை குறிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்

Posted On: 12 DEC 2024 4:44PM by PIB Chennai

மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், கலாச்சார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளை விரிவான ஊடக சந்திப்பில் எடுத்துரைத்தார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகளுக்கும் மேலான பதவிக்காலம் அமைந்துள்ளது என்று திரு ஷெகாவத் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது இந்தியர்களுக்கு சமூக-பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுசார் ரீதியாகவும் பயனளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் நாட்டின் கொள்கைகள் மற்றும் விருப்பங்களில் வலுவான மாற்றத்தை நாடு கண்டுள்ளது என்றும், இது வளர்ச்சி மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, இது ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார். காசியில் உள்ள விஸ்வநாத் தாம் இந்தியாவின் கலாச்சார தலைநகரின் அந்தஸ்தை தொடர்ந்து உயர்த்தி வருவதாக கூறினார். அதே நேரத்தில் சோம்நாத்தில் வளர்ச்சித் திட்டங்கள் புதிய அளவுகோல்களை அமைத்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார். புதுதில்லியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய யுகா யுகீன் பாரத் அருங்காட்சியகம், தேசிய கையெழுத்துப் பிரதி இயக்கம், உலகளாவிய காசி கலாச்சாரப் பாதை, இந்திய மொழிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, முதல் ஆசிய புத்த மத உச்சி மாநாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு கொண்டாட்டம் போன்ற குறிப்பிடத்தக்க திட்டங்களை திரு ஷெகாவத் எடுத்துரைத்தார். 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்படும் மகா கும்பமேளா, நமது நாட்டின் வளமான, ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் என்று திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

சுற்றுலாத் துறையில் மொத்தம் 76.17 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி வருவாய் $28.07 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2014 உடன் ஒப்பிடும்போது 42.53% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 95.64% அதிகரித்துள்ளது. உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 65 வது இடத்திலிருந்து 39 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083744

 

***

TS/IR/RJ/DL


(Release ID: 2083926) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi