புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 2024 அக்டோபர் மாதத்தில் 3.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
12 DEC 2024 4:00PM by PIB Chennai
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண்ணின் விரைவு மதிப்பீடுகள் மாதம்தோறும் 12-ம் தேதி (அல்லது 12-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன. மேலும் பல்வேறு முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. தரவுகள் அனைத்தும் தொழிற்சாலைகள் / உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு தொழில்துறை உற்பத்திக்கான குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
2024 அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகும். இந்த விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது.
சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.9 சதவீதம், 4.1 சதவீதம் மற்றும் 2.0 சதவீதமாகும்.
தொழில்துறையின் உற்பத்திக் குறித்த விரைவான மதிப்பீடுகள் 2023 அக்டோபர் மாதத்தில் 144.9 ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபரில் இந்த மதிப்பீடுகள் 149.9 ஆக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083705
-------
TS/SV/KPG/DL
(Release ID: 2083871)
Visitor Counter : 25