சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 6 நாள் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2024 2:00PM by PIB Chennai

 

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 11 முதல் 16 வரை "தொழில் 5.0 பார்வையில் சுறுசுறுப்பான உற்பத்தி அமைப்புகள்" என்ற தலைப்பில் ஆறுநாள் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தை நடத்துகிறது. இது அகில இந்திய தொழிற்நுட்பக் கல்வி கவுன்சிலின் பயிற்சி மற்றும் கற்றல் அகாடமியின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி என்ஐடி இயக்குநர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். டிசம்பர் 11ஆம் தேதி இந்த திட்டத்தை, பதிவாளர் டாக்டர் எஸ். சுந்தரவரதன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறை டீன் டாக்டர் ஜி.எஸ். மஹாபாத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். சந்திரசேகர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.வி.ஏ.ராஜு பஹுபாலேந்திருனி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து 125 பேர் பங்கேற்கின்றனர்.
தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு பிறகு, மாலை நேரங்களில் அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இந்தத் திட்டம் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து மற்றும் சீனாவில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு வல்லுநர்கள், மென்பொருள் துறையின் முக்கிய வல்லுநர்கள் மற்றும் புதுச்சேரி என்ஐடி கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர். தொழில்நுட்ப உதவியுடன் மனித மற்றும் இயந்திரங்களின் ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் விவாதிக்கப்படும். உற்பத்தித் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கும் அறிவு பரிமாற்றத்திற்கு இது ஒரு தளம் ஆகிறது.

***

AD/PKV/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2083650) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English