மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஆந்திரப்பிரதேசத்தில் பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல்
Posted On:
11 DEC 2024 2:28PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டம் உட்பட மாநிலத்தின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.559.10 கோடியில், பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆந்திர அரசிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயநகரம் மாவட்டம், சிந்தப்பள்ளியில் ஒரு மீன் இறங்குதளம் அமைப்பதற்கு மத்திய அரசின் பங்காக ரூ.1424.15 இலட்சம் செலவில் மொத்தம் ரூ.2373.59 இலட்சம் செலவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளது என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11,669 மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மீன்பிடி தடைக்காலத்தில் பயன்பெறும் 11,669 பயனாளிகளில், 8626 மீனவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விஜயநகரம் மாவட்டத்தில் 375 மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 2024 டிசம்பர் 10 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083148
***
IR/RJ/DL
(Release ID: 2083511)
Visitor Counter : 18