உள்துறை அமைச்சகம்
தேசிய புலனாய்வு முகமையின் சாதனைகள்
Posted On:
11 DEC 2024 4:12PM by PIB Chennai
என்.ஐ.ஏ.வின் சாதனைகள் வருமாறு:-
பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள், பயங்கரவாத நிதி, எஃப்.ஐ.சி.என், மனித கடத்தல் மற்றும் சைபர் பயங்கரவாதம் போன்ற பட்டியலிடப்பட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை தொடங்கப்பட்டதிலிருந்து 05.12.2024 வரை 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 109 வழக்குகள் தீவிர விசாரணையில் உள்ளன, 395 வழக்குகள் கூடுதல் விசாரணையில் உள்ளன. 505 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ இதுவரை 4174 குற்றவாளிகளை கைது செய்துள்ளது, 595 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் முடிவு செய்யப்பட்ட 147 வழக்குகளில், 140 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. என்.ஐ.ஏ விசாரித்த வழக்குகளின் தண்டனை விகிதம் 95.23% ஆகும். யுஏ (பி) சட்டத்தின் கீழ் 109.6 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 543 (அசையும் மற்றும் அசையா) சொத்துக்களை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது.
சைபர் பயங்கரவாதம், வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மனித கடத்தல் தொடர்பான வழக்குகளுக்காக என்ஐஏவில் மூன்று புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சகத்தின் சார்பாக என்ஐஏ 2022 நவம்பர் 18-19 தேதிகளில் புதுதில்லியில் 3 வது பயங்கரவாத நிதி எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டில் 78 நாடுகள் மற்றும் 16 பல்தரப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க பதிலை ஒருங்கிணைப்பதற்காக என்ஐஏ வருடாந்திர பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. ஏடிசியில் மாநிலங்களின் டிஜிபிக்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து அனைத்து மாநில ஏடிஎஸ் / எஸ்டிஎஃப் அதிகாரிகள் மற்றும் மத்திய ஏஜென்சிகளின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு சமீபத்தில் நவம்பர் மாதம் நடைபெற்றது.
மனிதவளத்தை வலுப்படுத்தும் வகையில், 2019 முதல், 810 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
என்.ஐ.ஏ-வின் வழக்குகளை விரைந்து விசாரிக்க, நாடு முழுவதும் 51 சிறப்பு நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. என்ஐஏ சார்பில் வழக்கு தொடர, என்ஐஏ தற்போது 135 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 42 மூத்த அரசு வழக்கறிஞர்களை கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
AD/ PKV/ RJ/ DL
(Release ID: 2083406)
Visitor Counter : 15