உள்துறை அமைச்சகம்
பேரிடர் அபாயத் தணிப்பில் பெண்களுக்கான தலைமைத்துவப் பங்களிப்பு
Posted On:
11 DEC 2024 4:16PM by PIB Chennai
பேரிடர் அபாயத் தணிப்பு குறித்த பத்து அம்ச செயல்திட்டத்தை பிரதமர் விவரித்துள்ளார். பேரிடர் அபாய மேலாண்மையில் மையமாக இருக்க வேண்டிய பெண்களின் தலைமை மற்றும் அவர்களின் அதிக ஈடுபாட்டிற்கு முக்கியத்துவம் இதில் அடங்கும்.
பேரிடர் அபாயத் தணிப்பில் மகளிர் தலைமையேற்க அரசு பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொள்கிறது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2019-ல், மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் பேரிடர் அபாய மேலாண்மையில் அவர்களின் தலைமைப் பங்கை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் ஆப்த சகியாக பெண்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது. ஏறக்குறைய ஒரு லட்சம் பயிற்சி பெற்ற ஆப்தா மித்ரா தன்னார்வலர்களில், 20% பயிற்சி பெற்ற பெண் தன்னார்வலர்கள் உள்ளனர்.
நாட்டில் உள்ள புயல் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பராமரிப்புக் குழுக்களின் பராமரிப்பு மற்றும் மேலாண்மையில், 50% பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்படுகிறது.
பேரிடர் தயார் நிலை மற்றும் மீட்புப் பணிகள், பயிற்சி மற்றும் ஒத்திகைப் பயிற்சிகள் தொடர்பான பல்வேறு பணிக்குழுக்களில் மகளிருக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், பேரிடர் அபாய மேலாண்மையில் பெண்களின் பங்களிப்பு குறித்த சிறந்த நடைமுறைகள் குறித்த தொகுப்பு ஒன்றை தயாரித்து, பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் பெண்களின் பங்கு குறித்து குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய ஆயுத காவல் படைகளைச் சேர்ந்த மகளிர் படைப்பிரிவினருக்கும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்காக துருக்கியில் அனுப்பப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்த மகளிர் மீட்புப் படையினர் முக்கிய பங்காற்றினர்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
AD/ PKV/ RJ/ DL
(Release ID: 2083398)
Visitor Counter : 21