ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
நாஃபித்ரோமைசின் - நாட்டின் முதல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து
Posted On:
06 DEC 2024 4:18PM by PIB Chennai
நஃபித்ரோமைசின் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தின் வெற்றி, பல்வேறு சுகாதார சவால்களுக்கு உள்நாட்டிலேயே தீர்வுகளை கண்டறிவதற்கான திறனை பறைசாற்றுவதாக உள்ளது.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு நீண்ட கால சவாலாக உள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய மருந்துகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், 30 ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்புக்கு, நாட்டின் முதல் உள்நாட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தான நாஃபித்ரோமைசின் உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு சில எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்காத நிலையில், நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது என்பது கடினமான பணியாக அமைந்தது. நோய் பரவல், நோயின் கடுமையான தாக்கம், இயலாமை, உயிரிழப்புபோன்ற விளைவுகள் சரியான மருந்துகள் இல்லாத காரணத்தால் ஏற்பட்டது.
குறிப்பாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்களில் நுண்ணுயிரியல் மருந்துகளின் பயன்பாடு, பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது. நோய்த்தொற்றுகள் காரணமாக ஆண்டும் தோறும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இத்தகைய உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில், புதிய மருந்துகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. இந்நிலையில் நஃபித்ரோமைசின் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக உயிரித் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் பயோடெக் தொழில் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2081506
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2081857)
Visitor Counter : 35