சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.169.9 கோடி ஒதுக்கீடு
மாமல்லபுரம், தேவாலா வளர்ச்சித் திட்டங்களால் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
Posted On:
04 DEC 2024 5:17PM by PIB Chennai
மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.169.9 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்கள் சுற்றுலா உள்கட்டமைப்பை பெருமளவு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் மாநிலத்தில் 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்காவும், ஊட்டியின் தேவாலாவில் உள்ள பூந்தோட்டமும் முக்கியமான இரண்டு முயற்சிகளாகும்.

திட்டம் 1: மாமல்லபுரம்: நந்தவனம் பாரம்பரிய பூங்கா
வளமான வரலாற்று, கலாச்சார பாரம்பரியத்துடன், மாமல்லபுரத்தை மேலும் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் தன்மையைக் கொண்ட நந்தவனம் பாரம்பரிய பூங்காவை மேம்படுத்துவதற்காக மாமல்லபுரத்திற்கு ரூ.99.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்: நந்தவனம் பாரம்பரிய பூங்கா திட்டம் நவீன சுற்றுலா வசதிகளை மாமல்லபுரத்தின் இயற்கை அழகுடனும் கலாச்சார முக்கியத்துவத்துடனும் இணைக்கும்.
இத்திட்டத்தில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்:
சோலை வனம் – ஒரு பரந்து விரிந்த தோட்டப் பூங்கா
விஹாரம் – ஒரு கலாச்சார, செயல்பாட்டு தளம்
மைதானம் – நிகழ்வுகள், கூட்டங்களுக்கான திறந்தவெளி அரங்கம்
இவை தவிர, ரூ.574 கோடி மதிப்புள்ள 14 பொது-தனியார் கூட்டு (பிபிபி) திட்டங்கள் மாமல்லபுரத்தின் சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேலும் உயர்த்தும்.
இந்த திட்டத்தில் இடம்பெறும் பிற அம்சங்கள்:
- சில்லறை விற்பனைக் கடைகளும், உணவகங்களும்
- ஆரோக்கிய மையங்களும், நிகழ்ச்சிகளுக்கான தளங்களும்
- ஒலி, ஒளி நிகழ்ச்சிகள்
- சாகச விளையாட்டுகள்
- கடல் உணவகங்கள், சுற்றுச்சூழலுக்கேற்ற குடில்கள்
- பாரம்பரிய கடற்கரை ஓய்வு விடுதிகள்
இந்த விரிவான வளர்ச்சி திட்டம் 2,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.

செயல்திட்டம் -2 : தேவாலா (உதகை): பூந்தோட்ட திட்டம்
மற்றொரு முக்கிய திட்டமான நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள தேவாலாவில் பூந்தோட்டம் அமைப்பதற்கு ரூ. 70.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதகை, வயநாடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றாக அதிக மழைப்பொழிவுடனும், அழகான சமவெளிப் பகுதியுடனும் சுற்றுலாவுக்கு உகந்த இடமாக தேவாலா அமைந்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: தேவாலாவில் அமைக்கப்படும் பூந்தோட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பலவகைப் பூக்களுடன் துலிப் மற்றும் கண்கவர் பூக்களும் காட்சிபடுத்தப்பட உள்ளன.
இந்தத் தோட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா அனுபவத்தை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மலையேற்ற பயிற்சி மற்றும் பறவைகளைக் கண்டு ரசிக்கும் பகுதிகள்
- கண்காட்சி அரங்குகள் மற்றும் துணிச்சலான சாகசப் பயணங்கள்
- குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள்
- தொங்கு பாலங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள்
பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் கூடிய முன்முயற்சிகள்: இந்தத் திட்டம் இரண்டு பொது – தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ. 115 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
- சமவெளிப் பகுதியில் ரோப்வே வசதிகள் மூலம் இயற்கை சூழலை காண்பதற்கான வசதிகள்
- மலை உச்சியில் சுற்றுலா கூடாரங்கள் அமைத்தல்
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தேவாலா, நீடித்த மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உருவாகும்.

***
SMB/PLM/VS/RR/AG/KV/DL
(Release ID: 2080839)
Visitor Counter : 59