விவசாயத்துறை அமைச்சகம்
இந்தியாவுக்கான மோல்டோவா தூதர் திருமதி அனா தபான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
Posted On:
03 DEC 2024 12:48PM by PIB Chennai
இந்தியாவுக்கான மோல்டோவா குடியரசின் தூதர் திருமதி அனா தபான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தூதரை வரவேற்ற டாக்டர் சதுர்வேதி, இந்தியாவுக்கும், மோல்டோவாவுக்கும் இடையிலான சுமூகமான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தினார். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைவது, பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் விவசாயிகளுக்கு சேவை வழங்குவதை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட வேளாண் துறையில் இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகளை அவர் எடுத்துரைத்தார். நோய் இல்லாத தோட்டக்கலை நடவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தூய்மையான தாவரத் திட்டத்தை நிறுவுவது குறித்தும், நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இயற்கை விவசாயத்திற்கான தேசிய இயக்கம் குறித்தும் டாக்டர் சதுர்வேதி எடுத்துரைத்தார்..
தூதர் அனா தபன், மோல்டோவாவின் வேளாண் துறை எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டி, அந்நாட்டு வேளாண் துறை செயல்பாடுகளை விளக்கினார். பல நாடுகளுடன் மோல்டோவாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (எஃப்.டி.ஏ) வலுவான வலையமைப்பையும் அவர் எடுத்துரைத்தார். இது வர்த்தகத்திற்கான சாத்தியமான சந்தை வாய்ப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டுப் பணிக்குழு அமைப்பதற்கான ஒப்புதல் நிலை குறித்தும், ஆப்பிள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தூதர் விவாதித்தார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்த வேளாண்துறை இணைச்செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு), அறிவுப் பகிர்வு, தொழில்நுட்ப பரிமாற்றம், வேளாண் பல்கலைக்கழகங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் மோல்டோவா இடையே வேளாண் உபகரணங்கள் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்துறை கூடுதல் செயலாளர் (பிபி) பைஸ் அகமது கித்வாய், இணைச் செயலாளர் (தனிப்பொறுப்பு), , வெளியுறவு அமைச்சகத்தின் பிரதிநிதி மற்றும் தூதரகத்தின் உதவியாளர் திருமதி லூசியா குலாட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2080015)
TS/MM/AG/KR
(Release ID: 2080044)
Visitor Counter : 33