சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் வட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

Posted On: 29 NOV 2024 8:42PM by PIB Chennai

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 மூலம் 17.08.2023 முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தச் சட்டம், மற்றவற்றுக்கிடையே, சட்டத்தில் பிரிவு 11டி-ஐ சேர்த்தது, இது சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி- இல் குறிப்பிடப்பட்டுள்ள 'முக்கியமான மற்றும் உத்திசார் கனிமங்கள்' தொடர்பான சுரங்க குத்தகைகள் மற்றும் கூட்டு உரிமங்களை பிரத்தியேகமாக ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

சுரங்க அமைச்சகம் முக்கியமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 24 தொகுதிகளை நான்கு தவணைகளில் வெற்றிகரமாக ஏலம் விட்டுள்ளது. 20.16 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுப்பு 2024 பிப்ரவரி மாதத்தில் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது. கட்டடம் ஏலத்திற்கு விடப்படுவதற்கு முன்பு தமிழக அரசிடமிருந்து உள்ளீடுகள் பெறப்பட்டன.

நில அட்டவணை விவரங்கள் கிடைக்கவில்லை என்று மாநில அரசு தெரிவித்தது. மேலூர் வட்டம், அரித்தாப்பட்டி கிராமத்தில் 47.37 ஹெக்டேர் கிரானைட் குவாரி குத்தகை, மாநில பொதுத்துறை நிறுவனமான டாமின் நிறுவனத்திற்கு 19.9.2008 அன்று 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிம நிறுவனம் குத்தகைக்கான ஒப்படைப்பு கருத்துருவை சமர்ப்பித்தது. மேலும், மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 379/1, 379/2 மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்தில் சர்வே எண் 137 ஆகியவற்றை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கை செய்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மாநில அரசு அறிவிக்கை அனுப்பியது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ பரப்பளவில், அரிதாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களுக்குள் 1.93 சதுர கி.மீ மட்டுமே பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் 07.11.2024 அன்று விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டு இந்த தொகுதி வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. பிப்ரவரி, 2024 முதல் 07.11.2024 அன்று ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை, ஏலத்திற்கு எந்த எதிர்ப்பும் இருப்பதாக மாநில அரசு உட்பட எந்த தரப்பிலிருந்தும் எந்த தகவலும் இல்லை. இந்த ஏலத்தை கைவிடுமாறு மாநில அரசும் மத்திய அரசிடம் கோரவில்லை.

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் வட்டம் 20.16 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த தொகுதி ஒரு கூட்டு உரிமத் தொகுதியாக ஏலம் விடப்பட்டுள்ளது, அதாவது தொகுதி ஓரளவு ஆராயப்பட்டுள்ளது மற்றும் வெற்றிகரமான ஏலதாரர் சுரங்க குத்தகை வழங்கப்படுவதற்கு முன்பு தொகுதியில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். 20.16 சதுர கி.மீ கூட்டு உரிமத் தொகுதியின் ஒரு பகுதிக்கு மட்டுமே சுரங்க குத்தகை இறுதியாக வழங்கப்படுகிறது.

எந்தவொரு வனப்பகுதியிலும் ஆய்வு மேற்கொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன. பல்லுயிர் தளம் போன்ற பகுதிகள் ஆய்வு நடவடிக்கைகளுக்கு சேர்க்கப்படவில்லை. மேலும், சுரங்க குத்தகை வழங்கப்படுவதற்கு முன்பு, தேவையான வன அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவை விதிமுறைகளின்படி பெறப்பட வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஒப்புக் கொள்ளப்படாத பகுதிகள் சுரங்க குத்தகைப் பகுதியில் சேர்க்கப்படாது.

கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்து செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் இது பின்பற்றப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2079214&reg=1&lang=1 

**************

BR/KV


(Release ID: 2079315) Visitor Counter : 50


Read this release in: English , Hindi