வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய சிமெண்ட் துறைக்கான தேசிய விருதுகள் சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொடர்பான 18-வது என்.சி.பி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியின் போது வழங்கப்பட்டன
Posted On:
29 NOV 2024 9:09PM by PIB Chennai
சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த 18-வது என்.சி.பி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, நவம்பர் 29, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது.தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டி.பி.ஐ.ஐ.டி) கூடுதல் செயலாளரும் நிதி ஆலோசகருமான திருமதி ஆர்த்தி பட்நாகர், எரிசக்தி மேம்பாடு, எரிசக்தி செயல்திறனில் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மேன்மை மற்றும் ஒருங்கிணைந்த சிமெண்ட் ஆலைகளில் சுழற்சி சிக்கனத்தை அடைவது மற்றும் சிமெண்ட் அரைக்கும் ஆலைகளில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மேன்மைக்கான தேசிய விருதுகளை வழங்கினார்.
இந்தியாவின் என்.பி.எல், என்.எம்.ஐ உடன் இணைந்து என்.சி.பி தயாரித்த ஜிப்சம் தரத்தின் இந்திய சான்றளிக்கப்பட்ட குறிப்புப் பொருளான பாரதிய நிர்தேசக் த்ராவியாவை (பி.என்.டி) திருமதி பட்நாகர் வெளியிட்டார். "மேக் இன் இந்தியா" மற்றும் "தற்சார்பு இந்தியா" ஆகிய அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் பி.என்.டி முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சர்வதேச சி.ஆர்.எம் இறக்குமதிக்கு மாற்றாக இருக்கும் மற்றும் அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும். சிமெண்ட் ஆலை செயல்பாடு குறித்த என்.சி.பி வழிகாட்டி விதிமுறைகளின் 8-வது பதிப்பும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மாநாட்டுடன் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியையும் பார்வையிட்ட திருமதி பட்நாகர், மாநாட்டில் பங்கேற்ற புத்தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடினார்.
என்.சி.பியின் தலைமை இயக்குநர் டாக்டர் எல் பி சிங், மாநாட்டில் 1160 பிரதிநிதிகள், 600+ பார்வையாளர்கள் மற்றும் 140+ மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாகக் கூறினார். மாநாட்டின் போது, 21 தொழில்நுட்ப அமர்வுகளில் 150 தொழில்நுட்ப ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் 08 அமர்வுகளில் 70 சுவரொட்டிகள் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டன. டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் நிறுவனத்தின் கௌரவ விருந்தினரும், ஆளுநர்கள் குழு உறுப்பினருமான திரு மகேந்திர சிங்கி மாநாட்டின் போது வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ஆவணங்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2079242®=1&lang=1
********************
BR/KV
(Release ID:2079242)
(Release ID: 2079314)
Visitor Counter : 32