அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான துரிதப்படுத்துவது குறித்த தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம்
Posted On:
29 NOV 2024 6:09PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பங்கேற்றும் ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பணிகளை விரைவுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தாக்கத்தை ஏற்படுத்தக்க கூடிய வகையிலான ஆராய்ச்சிப் பணிகளையும் நாடு முழுவதிலும் உள்ள இந்திய கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களையும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ கே சூத், நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களை ஆராய்ச்சி அமைப்புகளுக்கான சூழல் அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்த முடியும் என்று கூறினார். ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்கு முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மாணவர்களுக்கு உதவிடும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அபே கரந்திகார், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், ஆராய்ச்சிக்கான நிலைகளையும் உயர்த்த வழி வகுக்கும் என்று கூறினார்.
மத்திய கல்வி அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் குமார் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி அடிப்படையிலான பன்முகத் தன்மை கொண்ட சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
***
TS/LKS/KPG/KR/DL
(Release ID: 2079209)
Visitor Counter : 6