தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண்ணில் இந்தியா மிளிர்கிறது
அரசின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால் டிஜிட்டல் உருமாற்றம்
Posted On:
29 NOV 2024 4:16PM by PIB Chennai
உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இநதியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான வலைப்பின்னல் தயார்நிலைக்கான குறியீட்டு எண் தரவரிசையில் இந்தியா 49-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டின் அறிக்கைபடி 61-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 11 இடங்கள் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு, நிர்வாகம் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய 4 முக்கிய அம்சங்களின் கீழ் 133 பொருளாதார அடிப்படை கூறுகளின்படி, இந்தியாவின் வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்தியாவின் வலைப்பின்னல் தயார் நிலைக்கான மதிப்பு 53.63 புள்ளிகளுடன் தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தனது திறன்களை மேம்படுத்திக் கொண்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகள், உத்திசார் நடவடிக்கைகள் ஆகியவை மக்கள் தொடர்பு, புதிய கண்டுபிடிப்புகள், மின்னணு சேவைகள் என பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
2024-ம் ஆண்டின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சேவையில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த முக்கிய அம்சங்கள்:
இந்தியா குறிப்பிட்ட சில துறைகளில் தனது வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது.
1) முதல் நிலை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அறிவு சார் வெளியீடுகள், திறன் மற்றும் இணையதள அடிப்படையிலான தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதி
2) இரண்டாவது நிலை : வீடுகளுக்கு கண்ணாடி இழை நார் வாயிலான இணையதள வசதி / இணையதள சந்தாதாரர்களுக்கான கட்டமைப்பு, அகண்ட அலைவரிசையிலான வலைதள மொபைல் சேவைகள், சர்வதேச வலை தரத்திலான இணையதள சேவைகள்.
3) மூன்றாம் நிலை: உள்நாட்டு சந்தை வாய்ப்பு அதிகரிப்பு
4) நான்காம் நிலை: தொலைத் தொடர்பு சேவையை வருடாந்திர முதலீடுகள்
இந்தியாவின்டிஜிட்டல் மாற்றத்திற்கான உந்து சக்தியாக விளங்கும் அரசின் முன் முயற்சிகள்:
டிஜிட்டல் இந்தியா திட்டம்:
டிஜிட்டல் இந்தியா திட்டம் 2015-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய அரசின் முன்னோடி திட்டமான இத்திட்டம் அறிவுசார் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் டிஜிட்டல் அடிப்படையில் முன்னுரிமை வழங்குவதாக அமைந்துள்ளது.
அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான விரிவாக்கம்
டிஜிட்டல் அடிப்படையிலான கற்றல் முறைகள்
ஆன்லைன் அடிப்படையிலான அரசின் சேவைகள்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079034
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2079164)
Visitor Counter : 12