கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அளவிலான கூட்டுறவு மேம்பாட்டு நடவடிக்கைகள்

Posted On: 27 NOV 2024 4:44PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அரசு அமைத்துள்ளது;

1) தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL),

2) தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL),

3) பாரதிய பீஜ் சஹ்காரி சமிதி லிமிடெட் (BBSSL).

இச்சங்கங்கள் எம்எஸ்சிஎஸ் சட்டம்- 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO), கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (KRIBHCO), தேசிய வேளாண் கூட்டுறவு கூட்டுறவு, இந்திய சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED), குஜராத்   கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMF) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) ஆகியவற்றால் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL- என்சிஇஎல்) ஊக்குவிக்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களின் சரக்குகள் மற்றும் சேவைகளை நேரடியாக ஏற்றுமதி செய்யவும், இதர மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்நிறுவனம், அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க என்சிஇஎல் உதவும். இதுவரை 5,438 கூட்டுறவுச் சங்கங்கள் என்சிஇஎல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

கரிம பொருட்களின் சந்தைப்படுத்தல் ஆதரவை வழங்குவதற்காக தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (என்.சி.ஓ.எல்) அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,757 கூட்டுறவுச் சங்கங்கள் என்சிஓஎல்-ல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

தரமான விதைகளின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விநியோகத்தை மேற்கொள்வதற்காக பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட் (BBSSL) அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 14,816 கூட்டுறவு அமைப்புகள் பிபிஎஸ்எஸ்எல் உறுப்பினராக உள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

PLM/KPG/DL


(Release ID: 2078174) Visitor Counter : 5


Read this release in: English