சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
அரசியலமைப்பு நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது – மத்திய இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்
Posted On:
27 NOV 2024 2:47PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழாவை மத்திய சட்டம், நீதித்துறை விஞ்ஞான் பவனில் நேற்று (26.11.2024) கொண்டாடியது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை வாசிக்கப்பட்டு உறுதி மொழியேற்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது ராமஜென்மபூமி தீர்ப்பின் இந்தி பதிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் அரசியலமைப்பின் இணையதள இந்திப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளும், கொள்கைகளும் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது என்று கூறினார். அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள 'சமத்துவம்', 'சுதந்திரம்', 'சகோதரத்துவம்' ஆகிய வார்த்தைகள் இந்தியாவின் கண்ணோட்டத்தில் முக்கியமான, பொருத்தமான தன்மைகளைக் கொண்டுள்ளன என்று திரு மேக்வால் தெரிவித்தார்.
அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவரான தொலைநோக்கு பார்வை கொண்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இந்த வார்த்தைகள் இந்தியாவின் கலாச்சாரம், நெறிமுறைகள், பாரம்பரியத்தின் பங்களிப்பு என்று கூறியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அட்டர்னி ஜெனரல் திரு ஆர் வெங்கட்ரமணி பேசுகையில், பெருமைமிக்க நமது தேசத்தின் மாண்புகளை உறுதிப்படுத்த அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடுகிறோம் என்றார். இந்திய மக்களாகிய நாம் அதை மதித்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோஜ் குமார் நிறைவுரையாற்றினார். சட்ட வல்லுநர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள், ஊடகத் துறையின் மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077874
----
TS/PLM/KPG/KR
(Release ID: 2077967)
Visitor Counter : 10