தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டங்கள் : இந்தியாவின் தொழில் வளர்ச்சியை மெருகூட்டுகின்றன

Posted On: 25 NOV 2024 5:58PM by PIB Chennai

உலக அரங்கில் நாட்டின் பங்களிப்பை மறுவரையறை செய்வதற்கான  தொலைநோக்குக் கொள்கைகளால் உந்தப்பட்ட உறுதியான புதிய சகாப்தத்தில் இந்திய உற்பத்தித் துறை நுழைந்துள்ளது.  இந்த மாற்றத்தின் முன்னணியில் இருப்பது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டமாகும். இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அரசின் குறிக்கோளுடன் கூடிய முன்முயற்சியின் முக்கிய தூணாகத் திகழும் இத்திட்டம், புதுமைக் கண்டுபிடிப்புகள், செயல்திறன் மற்றும்  தொழிற்சாலைகளிடையேயான போட்டித் திறனை அதிகரிக்கிறது.

2020-ல் தொடங்கப்பட்ட பிஎல்ஐ திட்டம் ஒரு கொள்கையாக மட்டுமின்றி தற்சார்புக்கான நீடித்த முயற்சியாகவும் அமைந்துள்ளது. மின்னணு, ஜவுளி, மருந்துப் பொருள் மற்றும் மோட்டார் வாகன தொழில்துறையை முதன்மை இலக்காக வைத்து தொடக்கத்தில் நிதியுதவிகள் வழங்கப்பட்ட நிலையில், உற்பத்தி மற்றும் விற்பனையை பெருமளவு அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். 

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக, பெரிய அளவிலான மின்னணு சாதன உற்பத்தித் துறைக்கு 38,645 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதற்கு அடுத்தபடியாக மோட்டார் வாகன உதிரிப் பாக தொழில்களுக்கு 25,938 கோடி ரூபாயும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு 24,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி, இந்தியாவின் உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்தம் 1.46 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த முதலீடுகளால் உற்பத்தி மற்றும் விற்பனை ரூ.12.50 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதுடன்  நேரடியாகவும் மறைமுகமாகவும் 9.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.  இதில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076943 

---

TS/MM/KPG/DL


(Release ID: 2077067) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi