தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கே.எம்.முன்ஷி: தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், பண்பாட்டு ஆளுமை
Posted On:
24 NOV 2024 5:22PM by PIB Chennai
கன்ஹையலால் மானேக்லால் முன்ஷி 1887-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிறந்தார். இவர் 'கன்ஷ்யாம் வியாஸ்' என்று பிரபலமாக அறியப்பட்டவராவார். 1938-ம் ஆண்டில் 'பாரதிய வித்யா பவன்' என்ற கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.
ஸ்ரீ அரவிந்தரின் கருத்தால் கவரப்பட்ட அவர் புரட்சிகரக் குழுவை நோக்கி ஈர்க்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின் மும்பையில் குடியேறிய அவர், 'இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல் இந்தியா) இயக்கத்தில் ' சேர்ந்து 1915-ல் அதன் செயலாளரானார். 1927-ம் ஆண்டு, அவர் பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 'பர்தோலி சத்தியாகிரகத்திற்கு'பின் ராஜினாமா செய்தார்.
1930 மற்றும் 1932-ல் 'ஒத்துழையாமை இயக்கத்தில்' பங்கேற்றார். 1932-ல் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். 1937-ல் பம்பாய் மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்ற முன்ஷி, உள்துறை அமைச்சராக இருந்தபோது, பம்பாய் வகுப்புக் கலவரங்களை ஒடுக்கினார். 1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற முன்ஷி, மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் 1971 பிப்ரவரி 8 அன்று காலமானார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076610
***
(Release ID: 2076610)
TS/SMB/RR
(Release ID: 2076831)
Visitor Counter : 7