தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்தார் படேல் - இந்திய ஒற்றுமையின் சிற்பி

Posted On: 23 NOV 2024 4:43PM by PIB Chennai

 

1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி குஜராத்தின் நாடியாத் என்ற இடத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் படேல், இந்திய ஒருங்கிணைப்பின் சிற்பி ஆக திகழ்கிறார். அவரது தந்தை ஒரு தேசபக்தி மிக்க வசாயி ஜாவர்பாய். அவரது தாயார் லட்பாய், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கடின உழைப்பாளி பெண். தன்னம்பிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றின் மதிப்புகளை வல்லபாய் படேலுக்கு அவரது தாயார் ஊட்டினார்.

17-ம் ஆண்டு வரை தனது கிராமத்தில் கல்வி பயின்ற படேல், பின்னர் 1897-ல் நாடியாட் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். 1910 ஆம் ஆண்டில், அவர் இங்கிலாந்திற்குச் சென்று, 1912-ல் சிறப்புடன் பட்டம் பெற்றார். 1913-ல் இந்தியாவுக்குத் திரும்பியதும், அவர் அகமதாபாத்தில் ஒரு வெற்றிகரமாக சட்டப் பணிகளில் ஈடுபட்டு படிப்படியாக பொது சேவைக்கு மாறினார்.

சர்தார் படேலின் அரசியல் பயணம், மகாத்மா காந்தியுடன் இணைந்ததில் இருந்து தொடங்கியது. காந்திய கொள்கையான அகிம்சையில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அநியாய வரிகளுக்கு எதிராக பர்தோலி சத்தியாகிரகத்திற்கு தலைமை வகித்தார்.

"சர்தார்" என்ற பெயர், வெகுஜனத் தலைவராக அவரது பங்கை அங்கீகரிப்பதாகும். படேல் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அடக்குமுறை பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்தினார். பல முறை கைது செய்யப்பட்ட அவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் (1942) போது சிறைவாசம் அனுபவித்தார். காந்தியின் நம்பகமான நபராக, அவர் காங்கிரஸின் கராச்சி அமர்வுக்கு (1931) தலைமை தாங்கினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும், படேல் பதவி வகித்தார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் அமைதியான முறையில் ஒருங்கிணைத்தார். பெரிய சவால்கள் இருந்தபோதிலும், அவர் ராஜதந்திரம், உறுதி ஆகியவற்றின் மூலம் தேசத்தை ஒன்றிணைத்தார். இதனால் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்ற பட்டத்தைப் பெற்றார். அவரது பணி ஒரு ஜனநாயக, இறையாண்மை கொண்ட இந்தியாவுக்கான நிலையான அடித்தளத்தை உறுதி செய்தது. அரசியலமைப்பை உருவாக்குவதிலும் நிர்வாக கட்டமைப்பை நிறுவுவதிலும் படேல் முக்கிய பங்கு வகித்தார்.

சர்தார் படேல் டிசம்பர் 15, 1950-ல் காலமானார். "இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர்" என்ற அழியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவரை "வலிமையின் கோபுரம்" என்றும் "நவீன இந்தியாவைக் கட்டியவர்" என்றும் வர்ணித்து அஞ்சலி செலுத்தினார். அவரது பங்களிப்புகள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் மிக முக்கியமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்;

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/nov/doc20241123444801.pdf

https://pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=153445&ModuleId+=+2&reg=3&lang=1

*****

PLM/KV

 

 

 


(Release ID: 2076363) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Gujarati