சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted On: 22 NOV 2024 3:33PM by PIB Chennai

 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி மெட்ராஸ்) உள்ள NCAHT, R2D2 மையங்கள், RRD நிறுவனத்துடன் இணைந்து, இன்று முதல் 3 நாட்களுக்கு ‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ என்ற விளையாட்டுப் போட்டியை இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடத்துகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான தகவமைப்பு விளையாட்டுப் போட்டிகளை இந்த மூன்று நாள் நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024 நவம்பர் 22 முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ்-ன் உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையம் ஐஐடி மெட்ராஸ்-ன் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட இந்த முன்னோடி முயற்சிக்கான நிதியுதவியை ஆர்ஆர்டி என்ற பன்னாட்டு நிறுவனம் வழங்குகிறது

இந்நிகழ்ச்சியை ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயன் என். கும்மாடி தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் மனீஷ் ஆனந்த், ஆர்ஆர்டி கோ கிரியேட்டிவ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் திரு. கவுசிக் சராவாகி உள்ளிட்ட இதில் தொடர்புடைய பலரும் கலந்துகொண்டனர்.

‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்) முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் கவனம் செலுத்திவருகிறது. ஆய்வகங்களில் ஆய்வுப் பணியை மேற்கொள்வது மட்டுமின்றி அவற்றை சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் உதவி சாதனங்களையும் மறுவாழ்வுத் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் இக்கல்வி நிறுவனம் முன்னோடியாக செயல்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ் தனது வெளிப்புற, உட்புற கட்டிடங்களை அணுகக்கூடிய வகையில் ஒருங்கிணைத்துள்ளது. மாடிகளில் அமைந்துள்ள விடுதிகள், அனைத்துத் துறை கட்டடங்கள் ஆகியவற்றுக்கு லிஃப்ட் வசதிகளுடன், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்விச் சூழலில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இதர நிறுவனங்களுடன் இக்கல்வி நிறுவனம் கலந்தாலோசித்து வருகிறது.

‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ நிகழ்வுகளை 2024-25ல் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு நிகழ்வுகள் மூன்றுநாள் விளையாட்டு முகாமாக நடத்தப்படும். முதன்மையாக இயக்கக் குறைபாடுள்ள நபர்களை வெவ்வேறு தகவமைப்பு விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தி பயிற்சி அளிக்கப்படும்.

‘திறமை அனைவருக்கும் விளையாட்டு’ என்ற நிகழ்வு முந்தைய இரண்டு முயற்சிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். திறமை 2020 நிகழ்வு ஆர்ஆர்டி நிறுவனத்தால் கருத்தமைக்கப்பட்டது. 2022, 2023ம் ஆண்டுகளில் அனைவருக்கும் விளையாட்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் ஐஐடி மெட்ராஸ்-ன் R2D2, NCAHT ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

***

 


(Release ID: 2075960) Visitor Counter : 24


Read this release in: English