சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
"மலிவு விலை வீடுகளில் கட்டுமான ரசாயனங்களின் பங்கு" குறித்த சர்வதேச பயிலரங்கு
Posted On:
22 NOV 2024 2:52PM by PIB Chennai


இந்திய தர நிர்ணய அமைவன- சென்னை கிளை அலுவலகம், ஹபிடேட் போர் ஹுமானிட்டி இன்டெர்னஷனலுடன் இணைந்து "மலிவு விலை வீடுகளில் கட்டுமான ரசாயனங்களின் பங்கு" குறித்த சர்வதேச அளவிலான ஒரு பயிலரங்கை சென்னையில் 22-ந் தேதி நடத்தியது.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி-டி/இணை இயக்குனரான திரு டி.ஜீவானந்தம் சிறப்புரை ஆற்றி, மலிவு விலை வீடுகளுக்கான தர உத்தரவாதத்தை அளிப்பதில் பிஐஎஸ்-ன் முக்கிய பங்கை விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, கட்டுமான ரசாயனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு கார்த்திக் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அவர் புதுமைகளை மேம்படுத்துவதிலும் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் தொழில்துறையின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2075948)
Visitor Counter : 84