சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தணிக்கை துறை சார்பில் சென்னையில் நாளை ‘தணிக்கை ஓட்டம்- மினி மாரத்தான்’

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா சுப்பிரமணியன் தொடங்கிவைக்கிறார்

Posted On: 22 NOV 2024 1:23PM by PIB Chennai

தணிக்கை தினம்-2024 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நாளை (23.11.2024) தணிக்கை ஓட்டம் எனும் மினி மாரத்தான் ஓட்டத்திற்கு மத்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் சென்னை மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை பெசன்ட் நகர், ராஜாஜி பவனில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த தணிக்கை ஓட்டத்தை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளார்.

 தெற்கு ரயில்வே தணிக்கை பிரிவின் தலைமை இயக்குநர் திருமதி ஆனிம் செரியன், தமிழ்நாடு-புதுச்சேரி வட்ட முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரி (தணிக்கை-2) திரு கே பி ஆனந்த், சென்னையில் உள்ள தணிக்கைத்துறை தலைமை இயக்குநர் (மத்தியப்பிரிவு) திரு ஆர் திருப்பதி வெங்கடசாமி,  தமிழ்நாடு வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி (தணிக்கை-1) திரு டி ஜெய்சங்கர் மற்றும் வணிக தணிக்கைப் பிரிவின் முதன்மை இயக்குநர் திரு எஸ் வெள்ளியங்கிரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கவுள்ளனர்.

இந்த ஓட்டம் ராஜாஜி பவனில் இருந்து புறப்பட்டு, பெசன்ட் நகர் 4-வது பிரதான சாலை, 5-வது நிழற்சாலை, பெசன்ட் நிழற்சாலை, ஆவின் சந்திப்பு, ஆல்காட் பள்ளி வழியாக சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்று மீண்டும் ராஜாஜி பவனை வந்தடையும்.

இதேபோன்று தமிழ்நாடு-புதுச்சேரி வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி (தணிக்கை-2) அலுவலகம் சார்பில்,  தணிக்கை வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, வருகிற 25.11.2024 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலக வளாக திறந்தவெளி கலையரங்கில் பிற்பகல் 3.00 மணி முதல் 5.15 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவர் திரு கே செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை பொதுத்துறை நிறுவனங்கள் குழுத் தலைவர் திரு ஏ பி நந்தகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.

***

AD/MM/AG/KR

 


(Release ID: 2075903) Visitor Counter : 25