கலாசாரத்துறை அமைச்சகம்
82 இளம் கலைஞர்களுக்கு 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது நாளை வழங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
21 NOV 2024 2:27PM by PIB Chennai
உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருது:
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், 82 இளம் கலைஞர்களுக்கு 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை, 2024 நவம்பர் 22 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கவுள்ளார். விருது வழங்கும் இந்த விழாவுக்கு சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா நந்தூரி ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.
விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து 2024 நவம்பர் 22 முதல் 26 வரை, உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது பெற்ற மேகதூத் தியேட்டர் காம்ப்ளக்ஸ், ரவீந்திர பவன், கோப்பர்நிக்கஸ் மார்க், புது தில்லி; அபிமஞ்ச் தியேட்டர், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, பவல்பூர் ஹவுஸ், புது தில்லி மற்றும் விவேகானந்தா ஆடிட்டோரியம், கதக் கேந்திரா, சாணக்கியபுரி
சங்கீத நாடக அகாடமி ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
2006-ம் ஆண்டில் 40 வயது வரையிலான இளம் கலை பயிற்சியாளர்களுக்காக பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் பெயரில், உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது ஏற்படுத்தப்பட்டது. உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் ஆண்டுதோறும் இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகள் ஆகிய துறைகளில் சிறந்த இளம் கலைஞர்களுக்கு, டெல்லி மற்றும் டெல்லிக்கு வெளியே நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கப்படுகிறது. யுவ புரஸ்கார் விருதில் ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்), ஒரு பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு அங்கவஸ்திரம் ஆகியவை அடங்கும்.
உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் நிறுவப்பட்டதற்கான காரணம், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலை வடிவங்கள் மற்றும் நாட்டின் பிற தொடர்புடைய கலை வடிவங்களில் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதாகும்.
2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075433
***
TS/MM/RS/KR
(रिलीज़ आईडी: 2075527)
आगंतुक पटल : 142