பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்தான் : தத்தெடுப்பை ஆதரிப்போம்
Posted On:
20 NOV 2024 11:16AM by PIB Chennai
ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான, பாதுகாக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தகுதியானதுதான். ஆனால் சில குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் நிலையான குடும்பத்திலிருந்து விலகியிருக்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு அன்பான, ஆதரவான குடும்ப உறவுகளை ஏற்படுத்தி கவனிப்பையும், வளர்ச்சியையும் வழங்குவது தத்தெடுப்பு முறையாகும். குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நெறிமுறை சார்ந்த, வெளிப்படைத்தன்மை உள்ள நடைமுறையை, சட்டப்பூர்வ தத்தெடுப்பு உறுதி செய்கிறது. தேவை உள்ள குழந்தைகளுக்கு ஒளிமயமான மற்றும் நம்பிக்கை அளிக்கும் எதிர்காலத்தை சட்டப்பூர்வ தத்தெடுப்பு எவ்வாறு வழங்குகிறது என்பதை தத்தெடுக்கும் வழிப்புணர்வு மாதம் நினைவுபடுத்துகிறது. தத்தெடுக்கும் குடும்பங்களின் தேவை, தத்தெடுப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை இம்மாதம் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. மத்திய தத்தெடுப்பு ஆதாரவள ஆணையம் இதற்கான முன்முயற்சியை மேற்கொள்கிறது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் சட்டப்பூர்வ தத்தெடுப்பின் முக்கியத்துவத்தை இம்மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் முன்னெடுத்துச் செல்கிறது. “14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதன் மூலம் மறுவாழ்வு அளிப்பது” என்பது இந்த ஆண்டுக்கான மையப்பொருளாகும். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 2024 நவம்பர் 21 அன்று லக்னோவில் தத்தெடுப்பு மாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த இயக்கத்தின் போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேரடியாகவும், இணையதளத்தின் வழியாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலந்துரையாடல் அமர்வுகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விநாடி வினா அமர்வுகள் போன்றவை நடத்தப்பட உள்ளன. மத்திய தத்தெடுப்பு ஆதாரவள ஆணையம், மைகவ் இந்தியாவுடன் இணைந்து இணையதளம் வழியாக கதை சொல்லுதல், சுவரொட்டி தயாரித்தல், முழக்கத் தொடர்கள் உருவாக்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. சமூக ஊடகங்கள் மூலமும் சட்டப்பூர்வ தத்தெடுப்பின் முக்கியத்துவத்தை இந்த ஆணையம் தகவல்கள் மூலம் பகிரும்.
தத்தெடுப்பு என்பது பதிவு, இருப்பிட ஆய்வு, குழந்தைகளுடன் ஒப்பிடுதல், சட்டப்பூர்வ நடைமுறைகள், தத்தெடுப்புக்குப் பிந்தைய கண்காணிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகளைக் கொண்டதாகும்.
தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம் போன்ற முன்முயற்சிகள், தத்தெடுப்பு நடைமுறைகளை விளக்குவதன் மூலம் ஏராளமான குடும்பங்களில் உள்ளவர்களின் இதயங்களைத் திறந்து வீடுகளையும் திறக்க ஊக்கம் அளிக்கிறது. விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ப்புச் சூழலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்கும் வாய்ப்பை வழங்கமுடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074881
----
TS/SMB/KPG/KR
(Release ID: 2075199)
Visitor Counter : 63