புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது
Posted On:
12 NOV 2024 6:51PM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அதன் வளர்ச்சி குறித்த சமீபத்திய தரவை வெளியிட்டுள்ளது. இது அக்டோபர் 2023 முதல் அக்டோபர் 2024 வரை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்த 'பஞ்சாமிர்தம்' இலக்குகளுக்கு ஏற்ப தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த முன்னேற்றம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறன் ஒரு வருடத்தில் 24.2 ஜிகாவாட் (13.5%) அதிகரித்து, அக்டோபர் 2023 -ல் 178.98 ஜிகாவாட்டிலிருந்து அக்டோபர் 2024-ல் 203.18 ஜிகாவாட்டை எட்டியது. இந்த குறிப்பிடத்தக்க உயர்வு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் லட்சிய இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. அணுசக்தி உட்பட, மொத்த புதைபடிவம் அல்லாத எரிபொருள் திறன் 2024-ல் 211.36 ஜிகாவாட்டாக உயர்ந்தது, இது 2023-ல் 186.46 ஜிகாவாட்டாக இருந்தது.
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளன
ஏப்ரல் முதல் அக்டோபர் 2024 வரை, இந்தியா 12.6 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்த்தது. அக்டோபர் 2024-ல் மட்டும், 1.72 ஜிகாவாட் நிறுவப்பட்டது, இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி விரைவான மாற்றத்தைக் குறிக்கிறது.
***
PKV/AG/KV
(Release ID: 2072843)
Visitor Counter : 21