ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வளத் துறையால் சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது
Posted On:
12 NOV 2024 6:36PM by PIB Chennai
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள், சார்பு / துணை அலுவலகங்களில் சிறப்பு இயக்கம் 4.0 நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள குறைகளுக்குத் தீர்வு காண்பதை விரைவுபடுத்துவதையும், அரசு அலுவலகங்களில் தூய்மையை மேம்படுத்துவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் துறை மற்றும் அதன் அமைப்புகள் இயக்க நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டன. மேலும் துறையின் செயல்திறன் பெரும்பாலான இலக்குகளில் 100% பூர்த்தி செய்யப்பட்டது.
இந்த இயக்கத்தின் போது 72 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில், 67 குறிப்புகளுக்கும், பிரதமர் அலுவலகத்தின் 21 குறிப்புகளில் 19 குறிப்புகளுக்கும், நாடாளுமன்றத்தின் 19 உறுதிமொழிகளில் 9 உறுதிமொழிகளுக்கும் தீர்வு காணப்பட்டது. பொதுமக்களின் 47 குறைகளுக்கும், பொதுமக்களின் 34 மேல்முறையீடுகளுக்கும் முழுமையான தீர்வு காணப்பட்டது.
5959 நேரடி கோப்புகளும், 857 மின் கோப்புகள் அகற்றப்பட்டன.
434 இடங்களில் தூய்மை இயக்கப் பணிகள் நடைபெற்றன.
பழைய பொருட்கள் விற்பனை மூலம் ரூ.72,64,141/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தூய்மைப் பணிகள் மூலமும் கழிக்கப்பட்ட பழைய பொருட்களை அகற்றியதன் மூலமும் 55083 சதுர அடி பரப்பளவு நிலம் காலியாக்கப்பட்டது.
***
IR/KPG/KV
(Release ID: 2072835)
Visitor Counter : 27