பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரசு பணி நியமனத்தில் நேர்மறையான முன்னேற்றம்
Posted On:
11 NOV 2024 6:01PM by PIB Chennai
”நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே எங்கள் உறுதிப்பாடு. மத்திய அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன”.
~பிரதமர் திரு நரேந்திர மோடி
இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டின் இளைஞர்கள் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வேலைவாய்ப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவை அரசின் ஆட்சேர்ப்பு முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. 2023-24-ம் ஆண்டில், பணியாளர் நலத்துறை அமைச்சகம் குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கான பணியமர்த்தலை கணிசமாக அதிகரித்தது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு 1,41,487 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இது கடந்த பத்து ஆண்டுகளில் மிக உயர்ந்த ஆட்சேர்ப்பாகும்.
மத்திய அரசுப் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இது மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த அலுவலகங்களில் பி மற்றும் சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் முதன்மை நிறுவனமாகும்.
2023-24-ம் நிதியாண்டில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு 1,41,487 விண்ணப்பதாரர்களை ஆணையம் பரிந்துரைத்தது.
எஸ்.எஸ்.சி.யின் முயற்சிகளுக்கு மேலதிகமாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2022-2023-ம் ஆண்டில் 15 தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்புக்கு பங்களித்தது. மொத்தம் 4,195 பேர் பல்வேறு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சியை பூர்த்தி செய்ய இந்திய ரயில்வே தொடர்ந்து காலியிடங்களை நிரப்புகிறது. கடந்த சில ஆண்டுகளில் ரயில்வேயில் 1,30,581 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்த வேலைவாய்ப்பு: இந்தியாவில் வேலைவாய்ப்பு 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2017-18 ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்தது.
புள்ளிவிவரங்கள் இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் நேர்மறையான போக்கை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் முக்கிய துறைகளில் வேலைவாய்ப்பில் கணிசமான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2017-18-ம் ஆண்டில் 47.50 கோடியாக இருந்த மொத்த வேலைவாய்ப்பு 2022-23-ம் ஆண்டில் 59.67 கோடியாக அதிகரித்துள்ளது.
வேலை உருவாக்கத்தின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் முறையான பணியாளர்களை நோக்கிய மாற்றம் ஆகியவை பொது மற்றும் தனியார் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் அரசின் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சிகள் ஆட்சேர்ப்பு செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய பணியாளர் சக்தியை உருவாக்க உதவுகின்றன. இதன் விளைவாக, பொதுத்துறை வேலைச் சந்தை மிகவும் திறமையானதாகவும் அணுகக் கூடியதாகவும் மாறி வருகிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் நேர்மறையாக உள்ளது. இது எதிர்காலத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153411&ModuleId=3®=3&lang=1
***
PLM/RS/DL
(Release ID: 2072492)
Visitor Counter : 49