சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நேரடியாக செலவு செய்வது குறைந்துள்ளது
Posted On:
10 NOV 2024 2:00PM by PIB Chennai
2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார கணக்குகள் தரவு ஒரு நேர்மறையான போக்கை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து நேரடியாகச் செய்யும் செலவு பெருமளவுக்கு குறைந்துள்ளது. பெரும்பாலும் அதிகரித்த அரசாங்க முதலீடு மற்றும் மேம்பட்ட பொது சுகாதார கட்டமைப்பின் காரணமாக, 2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதார செலவினம் 1.13% முதல் 1.84% வரை உயர்ந்தது. கூடுதலாக, ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் இதன் பங்கு 3.94% இலிருந்து 6.12% ஆக உயர்ந்தது. இது பொது சுகாதாரத்திற்கான வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதே காலகட்டத்தில், தனிநபர் சுகாதார செலவினம் ரூ 1,108 இலிருந்து ரூ3,169 ஆக மூன்று மடங்காக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசை அனுமதிக்கிறது, சேவைகளை மிகவும் மலிவாகவும் மற்றும் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.
இது பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கையால், இந்த மாற்றம் மேலும் வலியுறுத்தப்பட்டது, அங்கு முதலீடுகள் உடனடி சுகாதாரத் தேவைகள் மற்றும் தொற்றா நோய்களின் (என்.சி.டி) எழுச்சி போன்ற நீண்டகால சுகாதார சவால்கள் இரண்டையும் இலக்காகக் கொண்டிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072149
*****
PKV/KV
(Release ID: 2072167)
Visitor Counter : 27