கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை மற்றும் நிலுவை குறைப்பில் பெரும் சாதனைகளுடன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ஐ நிறைவு செய்தது

Posted On: 09 NOV 2024 9:51AM by PIB Chennai

 

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் 2024, அக்டோபர் 2 முதல் 31  வரை சிறப்பு இயக்கம் 4.0- வெற்றிகரமாக நிறைவு செய்தது. இது தூய்மையை நிறுவனமயமாக்குதல், அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகளில் நிலுவைக் கோப்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. இயக்கத்தின் செயல்படுத்தல் கட்டத்தின் போது, நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, கோப்புகளை குறைப்பது, அலுவலக இடங்களை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பணியிடத்தை உருவாக்குவது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

இயக்கத்தின் போது, 1.29 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டனஇது 1.01 லட்சம் தேவையற்ற கோப்புகளை அகற்ற வழிவகுத்தது, சுமார் 68,916 சதுர அடி அலுவலக இடத்தை விடுவித்தது. இந்த மறுசீரமைப்பின் மூலமும் பழைய நிலங்கள் விற்கப்பட்டதன் மூலம் ரூ.4.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, 369 தூய்மை இயக்கிகள் நடத்தப்பட்டன, மேலும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நெறிப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகளை மேம்படுத்துவதற்கும் 13 செயல்பாட்டு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டன.

"துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் தூய்மையான, மிகவும் திறமையான பணிச்சூழலை வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில் எங்கள் சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் நிலையான நடைமுறைகளை ஆதரிக்கிறது. சிறப்பு இயக்கம் 4.0 மூலம்நிலுவையில் இருப்பதைக் குறைத்து, அதிக செயல்பாட்டு அலுவலக இடங்களை உருவாக்கியது மட்டுமின்றி, கழிவுகளிலிருந்து கலை மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்துதல் போன்ற புதுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முயற்சிகள் 'தூய்மை இந்தியா' மற்றும் அனைவருக்கும் பசுமையான, மிகவும் பொறுப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன" என்று இத்துறையின் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சக உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அலுவலகக் கழிவுகளை உரமாக மாற்றுதல், கழிவுப் பொருட்களிலிருந்து கலைப்படைப்புகளை உருவாக்குதல்பூரி கடற்கரையில் மணல் சிற்பக் காட்சியை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல சிறந்த நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. தூய்மை இயக்கங்களில் பள்ளி பங்கேற்பு, காய்கறி சந்தைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகள் விநியோகம், உயர் மின்னழுத்த மின்னல் அபாயங்களைத் தணிக்க பனை விதை நடவு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகள் மூலம், செயல்பாட்டு திறன், சமூக ஈடுபாடு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை அமைச்சகம் நிரூபித்துள்ளது.

***** *****

SMB/KV

 

 

 

 

 


(Release ID: 2072008) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi