எரிசக்தி அமைச்சகம்
சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மின்சாரத் துறை நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்
Posted On:
08 NOV 2024 5:20PM by PIB Chennai
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், சண்டிகர் யூனியன் பிரதேச செயலகத்தில், இன்று, சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மின்சாரத் துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்தக் கூட்டத்தில் யூனியன் பிரதேச நிர்வாகியின் ஆலோசகர், யூனியன் பிரதேச அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மின்சாரத் துறை மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து யூனியன் பிரதேசத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர், சண்டிகருக்கு வருகை தந்ததற்கு யூனியன் பிரதேச நிர்வாகியின் ஆலோசகர் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேச மின்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செயலாளர்கள் அந்தந்த விளக்கக்காட்சிகளை வழங்கினர்.
கூட்டத்தில் பேசிய, யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்த மின்சாரத் துறை நிலவரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், மின்சாரத் துறையின் செயல்பாட்டு செயல்திறன் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, கடந்த 5 ஆண்டுகளில் துறையின் ஆணை, அதன் கட்டமைப்பு, மின் கொள்முதல் ஆதாரங்கள், மின் சொத்துக்கள், நுகர்வோர் சுயவிவரம், ஏடி&சி மற்றும் புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமை இணக்கம் பற்றி யூனியன் பிரதேச நிர்வாகம் எடுத்துரைத்தது. மேலும், மின்சார நுகர்வோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதில் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட முயற்சிகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், கூட்டத்திற்கு வந்த அனைத்து பிரமுகர்களையும் வரவேற்றார். யூனியன் பிரதேசத்திற்கான தனது பயணம் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் தீர்ப்பதற்கும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
யூனியன் பிரதேசம் ஒரு நகரப் பகுதியாக இருப்பதால், ஏடி & சி இழப்புகளை மேம்படுத்த மேலும் முயற்சிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து அரசு கட்டடங்களுக்கும் கட்டண ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வர வேண்டும். மின் நிறுவனங்களின் நிதிச் செயல்பாடு சீர்குலைந்தால், குடிமக்களுக்கான சேவை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அரசுக்கு உரிய காலத்தில் நிலுவைத் தொகையை வழங்குவதற்கான வழிமுறையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
யூனியன் பிரதேசம் அனைத்து அரசு கட்டிடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் மேல் கூரை சூரிய சக்தியை நிறுவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்த மத்திய மின்துறை அமைச்சர், யூனியன் பிரதேச மக்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
----
MM/KPG/DL
(Release ID: 2071831)
Visitor Counter : 19