சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இளையோர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 132 காஷ்மீர் இளைஞர்கள் தமிழகம் வருகை

Posted On: 08 NOV 2024 2:41PM by PIB Chennai

மை பாரத் தமிழ்நாடு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் & விளையாட்டு அமைச்சகம் மற்றும் சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி இணைந்து, காஷ்மீரி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு சென்னை அடையாறு, இளைஞர் விடுதியில் ஏற்பாடு செய்துள்ளது. 2024 நவம்பர் 09 முதல் 15 வரை காஷ்மீரின்  பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களான அனந்தநாக், குப்வாரா, பாரமுல்லா, புத்காம், ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 132 காஷ்மீரி இளைஞர்கள் இந்த ஏழு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களிடையே தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவது. நாட்டின் கலாச்சார, தொழில்துறை, வரலாற்று, மத மற்றும் கல்வி ஆர்வமுள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு, பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். பங்கேற்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்கள், தவறான எண்ணங்கள், இடைவெளிகள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் சூழ்நிலைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் சுற்றுலா, உணவு வகைகள், கலாச்சாரம், கைவினைப்பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க, ஒரு பாராட்டத்தக்க அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். சமூக-கலாச்சார, மத-அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமை பற்றிய ஒருவருக்கொருவர் புரிதல்களைப் பாராட்டவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், இந்திய அரசியலமைப்பு, குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி மற்றும் தேச மேம்பாடு. காஷ்மீர் இளைஞர்களை வெளிப்படுத்துதல் பற்றிய தகவல் மற்றும் அறிவை வழங்குதல் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கு காஷ்மீரி இளைஞர்களை வெளிப்படுத்துதல் போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட வழிவகை செய்ய இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் தருகிறது.

09 நவம்பர் 2024 அன்று மாலை 04.30 மணிக்கு ஏழு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்சியை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையின் முதன்மை செயலாளர் /ஆணையர், திரு பிரகாஷ் கோவிந்தசாமி IAS, காவல்துறை I.G. டாக்டர் பி. ஷாமூண்டேஸ்வரி, IPS, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு M. அண்ணாதுரை, IIS, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தலைமை நிர்வாக இயக்குனர் திரு சாய் பிரகாஷ் லியோ முத்து, மை பாரத், மாநில இயக்குநர் திரு S. செந்தில்குமார், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

ஏழு நாள் நடைபெறும் காஷ்மீரி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில், பல்வேறு நிபுணர்களின் கல்வி அமர்வுகள், பங்கேற்கும் மாநிலங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி நடவடிக்கைகள், வெளிப்பாடு வருகைகள், உணவுத் திருவிழா, தொழில் வழிகாட்டுதல் மற்றும் தூய்மை பாரதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும். இது தவிர காஷ்மீர் இளைஞர்கள் பல்வேறு நாட்களில் தமிழ்நாடு தலைமை செயலகம், கலாக்ஷேத்ரா நிலையம், பி.எம்.பிர்லா கோளரங்கம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு. மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு செல்லவுள்ளனர். பங்கேற்பாளர்கள் தங்கள் பிராந்தியத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களையும் தினசரி மாலையில் நிகழ்த்துவார்கள். 15.11.2024  அன்று இதன் நிறைவு விழா அடையாறு இளையோர் விடுதியில் நடைபெறும்.

***


(Release ID: 2071741) Visitor Counter : 28


Read this release in: English