சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

காரைக்கால் தேசிய தொழிற்நுட்ப கழகத்தில் ஊழல் விழிப்புணர்வு வார விழா

प्रविष्टि तिथि: 08 NOV 2024 3:02PM by PIB Chennai

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்ப கழகம் புதுச்சேரியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் பரிந்துரையின் பெயரில் 28.10.2024 முதல் 03.11.2024 வரை விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தேசத்தின் செழுமைக்கான ஒருமைப்பாட்டின் கலாச்சாரம் என்ற தலைப்பை மையமாகக்கொண்டு கொண்டாடப்பட்டது.

கழகத்தின் இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் மற்றும் கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் இவர்கள் முன்னிலையில் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் அவர்கள் "கல்வி ஒருமைப்பாடு" என்ற தலைப்பில் ஆராய்ச்சி அறிஞர்களுடன் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கட்டுரை எழுதுதல் மற்றும் சுவரொட்டி செய்து காண்பித்தல் போன்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்வேறு மொழிக் கழகங்களின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களின் துணையுடன் முனைவர் S. தங்கவேல் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

***

 


(रिलीज़ आईडी: 2071739) आगंतुक पटल : 80
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English