பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்

Posted On: 07 NOV 2024 6:25PM by PIB Chennai

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் (2014-ம் ஆண்டு  நவம்பர் 7) இந்த நாளில், அமல்படுத்தப்பட்டது. இது நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது முன்னாள் ராணுவ வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தது, ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை  செயல்படுத்துவதற்கான முடிவு இந்த நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது வீரர்களுக்கு நமது நாட்டின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

- பிரதமர் நரேந்திர மோடி

ஓய்வூதிய பலன்களில் நீண்டகால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையில், இந்தியா ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது அதன் முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவு. பல ஆண்டுகளாக, முன்னாள் வீரர்கள் போர்க்களத்தில் மட்டுமல்ல, தங்கள் சேவைக்குப் பிந்தைய வாழ்க்கையில், குறிப்பாக ஓய்வூதிய நலன்கள் என்று வரும்போது, சம அங்கீகாரத்திற்காகவும் போராடி வந்தனர். ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு சேவை செய்த வீரர்கள் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த அரசு ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது.

இந்த முன்முயற்சி நாட்டைப் பாதுகாத்தவர்களின் தியாகங்கள் மற்றும் சேவையை கௌரவிப்பதற்கான ஒரு முக்கியமான அர்ப்பணிப்பைக் குறித்தது, அவர்களுக்கு தகுதியான மரியாதை மற்றும் நிதி பாதுகாப்பை உறுதியளித்தது.

2024-ம் ஆண்டில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் , இந்தத் திட்டம் ஆயுதப்படை சமூகத்திற்கு அளித்த மகத்தான நன்மைகளைப் பிரதிபலிப்பது அவசியம். இந்த முயற்சி தற்போதைய மற்றும் கடந்த கால ஓய்வூதியதாரர்களுக்கு இடையிலான ஓய்வூதிய இடைவெளியைக் குறைப்பது மட்டுமல்லாமல், அதன் முன்னாள் வீரர்களின் நல்வாழ்வுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தியுள்ளது. ஓய்வூதிய பலன்களில் சமத்துவத்தையும், நியாயத்தையும் கொண்டு வருவதன் மூலம், மத்திய அரசுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ராணுவ வீரர்கள் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு தகுதியான மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது.

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) என்பது ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையாகும். அதே பதவியில் மற்றும் அதே கால சேவையுடன் ஓய்வு பெறும் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் தேதியைப் பொருட்படுத்தாமல், அதே ஓய்வூதியத்தைப் பெற வேண்டும். பணவீக்கம், ஊதிய விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் காலப்போக்கில் சேவை நிலைமைகளின் வளர்ந்து வரும் தன்மை ஆகியவற்றால் முன்னாள் வீரர்கள் எதிர்கொள்ளும் ஓய்வூதிய சலுகைகளில் உள்ள ஏற்றத்தாழ்வை இந்த கோட்பாடு நிவர்த்தி செய்கிறது.

தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இடையிலான ஓய்வூதிய இடைவெளியை அவ்வப்போது நிரப்புவதை உறுதி செய்வதன் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்தத் திட்டம் நேரடியாக பயனளிக்கிறது . 2014-ம் ஆண்டில் ஒரே ஓய்வூதியத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது ஒரு கொள்கை மாற்றம் மட்டுமல்ல, நாட்டிற்கு சேவை செய்தவர்களுக்கு அரசின் நன்றியாகும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071572

***

IR/RS/DL


(Release ID: 2071590) Visitor Counter : 61


Read this release in: English , Urdu , Hindi