சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
Posted On:
07 NOV 2024 1:57PM by PIB Chennai
இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் என்பது புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளுக்கான அழைப்பு மூலம் நாட்டின் எந்த பகுதியில் உள்ள குடிமக்களும் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும் என்ற வகையில், அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்ற முயற்சியாகும். இதுவே ஒரே நாடு, ஒரே ஆரோக்கியம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் நோக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் நவம்பர் 7 அன்று, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.
- இது நாட்டில் வளர்ந்து வரும் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை நோக்கி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த உலகின் முதல் நாடு இந்தியா ஆகும். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற மேடம் மேரி கியூரியின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் மட்டுமல்லாமல், புற்றுநோயை பொது சுகாதார முன்னுரிமையாக நிவர்த்தி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கவும் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியா, பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள், புகையிலை பயன்பாடு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் போதிய உடல் செயல்பாடுகள் இல்லாததால் புற்றுநோய் நோயாளிகளின் விரைவான அதிகரிப்பை கண்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 800,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநோய்களால் ஆண்களில் 35-50% பேரும், பெண்களில் 17% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பல்வேறு வகையான புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை, மேலும் பரவலான விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம், இந்தியா அதன் புற்றுநோய் பாதிப்பை கணிசமாகக் குறைத்து வருகிறது.
புற்றுநோய் என்பது தற்போது இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாகும். தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் 1-ன் தரவுகளின்படி, ஆண்டுதோறும் புதிதாக 800,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. இவற்றில், வாய்வழி, நுரையீரல், தலை, கழுத்து பகுதிகளில் புற்றுநோய்கள் உட்பட புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் குறிப்பாக பரவலாக உள்ளன. இது புற்றுநோய்களில் பெரும் விகிதத்திற்கு காரணமாகின்றன. இந்த புற்றுநோய்கள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை, ஆரம்பகால நோய்கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் புகையிலை நிறுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. இந்தியா, அதன் மாறுபட்ட மக்கள்தொகை மற்றும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளுடன், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு சமமான அணுகலை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்கிறது. மேம்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு, பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் புற்றுநோய் தடுப்பு பராமரிப்பு வசதிகளின் விரிவாக்கம் மூலம் இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மூலம் இந்த நோயின் பரவலை தடுப்பது அவசியமாகும்.
புகையிலை, உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் இந்தியாவின் புற்றுநோய் பரவல் பல வாழ்க்கை முறை தொடர்பான ஆபத்தான காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல் அல்லது அதை மெல்லுதல் மூலம் புகையிலை நுகர்வு என்பது, இந்தியாவில் புற்றுநோய்க்கு மிக முக்கியமான பங்களிப்பாகும். இதனால் ஆண்களில் 40-50% பேரும், பெண்களில் 20% பேரும் புற்றுநோய்களால் பாதிப்படைவதற்கு காரணமாகும். வாய்வழி புற்றுநோய்கள், குறிப்பாக, ஒரு முக்கிய கவலையாக உள்ளன, நாட்டின் சில பகுதிகளில் மெல்லும் புகையிலை அதிகம் காணப்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புகையிலை பயன்பாடு புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணி என்பதால், பல்வேறு பொது சுகாதார பிரச்சாரங்கள் மூலம் புகையிலை நுகர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. • விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பு: ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் திட்டத்தின் மூலம் புற்றுநோய் தடுப்பு செயல்முறை வலுப்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் சமூக அளவிலான சுகாதார தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் 1975-ல் தொடங்கப்பட்டது. பின்னர், புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது, இது 2010 முதல் செயல்பட்டு வருகிறது.
2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இந்தியாவில் புற்றுநோய் தடுப்பு பராமரிப்புக்கு ஊக்கமளித்துள்ளது, தேசிய சுகாதார இயக்கத்திற்கு சுமார் ரூ .4,000 கோடி நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை நோக்கி இயக்கப்படுகிறது. அவை புற்றுநோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதலுக்கு இன்றியமையாதவை ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071457
***
IR/RS/DL
(Release ID: 2071530)
Visitor Counter : 15