புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பசுமை வேகம் புதைபடிம எரிபொருட்களில் இருந்து தூய்மையான எரிசக்தியை நோக்கிய மாற்றம்

Posted On: 04 NOV 2024 5:27PM by PIB Chennai

புதைபடிம எரிபொருட்களின் பிடியில் சிக்கியுள்ள உலகில், இந்தியா வேறு பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. 2070-ம் ஆண்டிற்கான உறுதியான நிகர பூஜ்ஜிய இலக்குடன், ஆற்றலுக்கான தனது அணுகுமுறையை நாடு மறுபரிசீலனை செய்கிறது. ஆசிய வளர்ச்சி வங்கி, தனது சமீபத்திய ஆசிய-பசிபிக் பருவநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா, அதன் கவனத்தைப் புதைபடிம எரிபொருள் மானியங்களை, அளவுக்கு அதிகமான சார்பிலிருந்து, தூய்மையான ஆற்றலை வளர்ப்பதற்கு மாற்றுகிறது. அகற்றுதல், இலக்கு மற்றும் மாற்றம் நீடித்த முயற்சியால் வழிநடத்தப்பட்டு, இந்தியா அதன் புதைபடிவ எரிபொருள் ஆதரவை சீராகக் குறைத்து, சூரிய சக்தி, மின்சார வாகனங்கள் மற்றும் வலுவான ஆற்றல் ஆகியவற்றில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை  அனுமதித்தது. எரிபொருள் மானியங்களை சீர்திருத்துவதில் இந்தியாவின் தீர்மானம், மாற்றத்தை நிரூபித்துள்ளது, 2014 மற்றும் 2018-க்கு இடையில் மானியங்களை ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் குறைத்துள்ளது.

இந்த மாற்றம், சாதாரண சாதனை அல்ல. 2010 முதல் 2014 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களை படிப்படியாக நிறுத்துவது உட்பட கவனமான நடவடிக்கைகள் மூலம் இது எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2017 வரை இந்த எரிபொருள்கள் மீதான திட்டமிட்ட வரி உயர்வுகள். தைரியமான நடவடிக்கை என்றாலும், புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான அவகாசத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்டன. இது முன்னோடியில்லாத அளவில் தூய்மையான எரிசக்தி முயற்சிகளுக்கு நிதியை செலுத்த அரசை அனுமதித்தது. சூரிய சக்தி பூங்காக்கள், விநியோகிக்கப்பட்ட எரிசக்தி தீர்வுகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான மானியங்கள் இப்போது சீராக அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னோக்கிய பாதை தூய்மையான ஆற்றலுக்கான அதன் நோக்கத்தையும் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது, மேலும் நெகிழ்திறன் கொண்ட எரிசக்தி எதிர்காலத்தை நோக்கி மாற விரும்பும் மற்றவர்களுக்கு ஒரு வலுவான முன்மாதிரியை அமைக்கிறது.

----

TS/MM/KPG/DL




(Release ID: 2070689) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi