சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டபிள்யூடபிள்யூஎஃப் திட்ட மையம், பசுமையான, பிளாஸ்டிக் இல்லாத தீபாவளிக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கிறது

Posted On: 29 OCT 2024 6:46PM by PIB Chennai

தூய்மையான தீபாவளி இனிமையான தீபாவளி என்ற கருத்து, சுற்றுச்சூழலைப்  பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை  கொள்கைகளை வலியுறுத்துகிறது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி, தீபாவளிக்கு முந்தைய- பிந்தைய தூய்மைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், விழாவின்போது ஒரு நிலையான, சுற்றுச்சூழல் உணர்வுள்ள அணுகுமுறையை வளர்க்க முயல்கிறது.

இந்த சூழலில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மையம் மற்றும் வள பங்குதாரர், பசுமை, தூய்மையான மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளியை அடையாளப்படுத்தும் பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வை ஒரு விளக்கப்படம் சுவரொட்டி மூலம் பரப்புகிறது.

இந்தியாவில் உள்ள, இயற்கைக்கான உலகளாவிய நிதியமான டபிள்யுடபிள்யுஎஃப்-பின் திட்ட மையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் நோக்கம், பசுமையான, சுத்தமான, பிளாஸ்டிக் இல்லாத தீபாவளியை ஊக்குவிப்பது ஆகும்.

இது திருவிழாவின் உணர்வை பராமரிக்கிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கிறது. இது தூய்மை, ஒளி மகிழ்ச்சி ஆகியவற்றின் பாரம்பரிய மதிப்புகளுடன் அமைகிறது, பண்டிகைகள் அவற்றின் கலாச்சார சாரத்தை சமரசம் செய்யாமல் அதிக சுற்றுச்சூழல் உணர்வுடன் உருவாக முடியும் என்பதை இது காட்டுகிறது.

உறுதிமொழிகள் மூலம் பொதுமக்களின் பங்கேற்பு சார்ந்த தீர்வுகளை ஊக்குவிக்கிறது.

----

AD/PLM/KPG/DL




(Release ID: 2069355) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi