திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாளைய விதைகள் - உலக சிக்கன தினத்தில் கனவுகளை வளர்த்தல்
Posted On:
29 OCT 2024 5:36PM by PIB Chennai
உலக சிக்கன தினம், உலக அளவில் அக்டோபர் 31-ம் தேதியும் இந்தியாவில் அக்டோபர் 30 அன்றும் கொண்டாடப்படுகிறது. இது நிதி நலனில் சேமிப்பின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. இத்தாலியின் மிலனில் 1924-ல் தொடங்கப்பட்ட இந்த நாள், சிக்கனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க தனிநபர்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில், 1984-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இறந்ததைத் தொடர்ந்து, இந்த தினத்தை அனுசரிப்பது அக்டோபர் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
சேமிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்திய அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நிதி அமைச்சகம் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சேமிப்புத் திட்டங்களை மாறுபட்ட வகைகளில் வழங்குகிறது. ஒவ்வொரு திட்டமும் நிதி ரீதியாக மட்டுமல்லாமல், மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய ஒரு படிக்கல்லாகவும் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069273
-----
TS/PLM/KPG/DL
(Release ID: 2069336)
Visitor Counter : 12