திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா
Posted On:
29 OCT 2024 5:27PM by PIB Chennai
தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவின் 13வது நிகழ்ச்சி இன்று (2024 அக்டோபர் 29) நடைபெற்றது. இதில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.
நாட்டில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முயற்சிகளை அதிகரிக்க, மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC ) நாடு முழுவதும் வேலைவாய்ப்புத் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வுகள் வேலையில்லாத இளைஞர்களுக்குத் தனியார் துறையில் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
வேலைவாய்ப்புத் திருவிழா
இது ஒரு அரை நாள் நிகழ்வாகும். இதில் வேலை தேடுபவர்கள் நேர்காணலுக்கு வருகிறார்கள். இவற்றை ஏற்பாடு செய்ய, திறன் மேம்பாட்டுக் கழகம், திறன் மையங்களுடன் ஒத்துழைத்து செயல்படுறது.
இவை 18 முதல் 35 வயதுடைய இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளன. 8, 10, 12 ஆம் வகுப்புகள், அத்துடன் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி கல்வித் தகுதி உள்ளவர்கள் இவற்றில் பங்கேற்கலாம்.
தனியார் வேலை வாய்ப்புத் திருவிழாவின் இலக்குகள்
இளைஞர்களை மேம்படுத்துதல்
தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குதல்.
வேலை தேடுபவர்களுக்கும் வேலை வழங்குபவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகப்படுத்துதல்
நாடு முழுவதும் சமமான வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது
வேலைவாய்ப்புத் திருவிழாக்கள், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான அரசின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். வேலை தேடுபவர்களுக்கும் வேலை வழங்குபவர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், வேலைவாய்ப்பின்மை என்ற முக்கியமான பிரச்சினை நிவர்த்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல், தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்க தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்பைப் பார்க்கவும் httpspib.gov.inPressNoteDetails.aspxNoteId=153379&ModuleId=3®=3&lang=1
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2069327)
Visitor Counter : 39