பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கர்மயோகி வாரமும் கர்மயோகி இயக்கமும் - இந்தியாவின் குடிமைப் பணி சேவைகளின் சூழல்களைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன
Posted On:
27 OCT 2024 1:28PM by PIB Chennai
இந்தியாவின் குடிமைப் பணிகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் "கர்மயோகி வாரம்" – தேசிய கற்றல் வாரத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ச்சியான கற்றல், திறன் வளர்ப்பு கலாச்சாரத்தை அடைவதற்கு அரசு ஊழியர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாக இது உள்ளது. மேலும் இது நமது தேசிய சேவை இலக்குகளை மறுசீரமைப்பதற்கான தளமாகவும் செயல்படும். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல், சுய முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் 'ஒரே அரசு' என்ற பார்வையை ஏற்படுத்துவதை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கர்மயோகி வாரம்: வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அர்ப்பணிப்பு
2025 அக்டோபர் 19 முதல் 25, 2024 வரை ஒரு வார காலம் கர்மயோகி வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அக்டோபர் 27 நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கான தொடர்ச்சியான கற்றலின் வருடாந்திர கொண்டாட்டமாக கருதப்படுகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கர்மயோகி வாரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தேசிய கற்றல் வாரத்தில் குறைந்தபட்சம் 4 மணிநேர திறன் கற்றலை மேற்கொள்வார்கள்.
இந்த இயக்கம் ஒரு வலுவான டிஜிட்டல் சூழல் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்திய குடிமைப் பணி சேவைகளில் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும்.
சீர்திருத்தத்தின் அவசியம்:
கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை விரைவாக செயல்படுத்துவதிலும் அரசு ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனினும், தற்போதைய குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டு சூழல், சில சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இந்த பணி ஒரு விதிகள் அடிப்படையிலான மனிதவள மேலாண்மை அமைப்பிலிருந்து பாத்திரங்கள் அடிப்படையிலான மனிதவள மேலாண்மை அமைப்புக்கு ஒரு இயக்கத்தை ஆதரிக்கிறது .
கர்மயோகி இயக்கத்தின் மையமாக ஐஜிஓடி (iGOT-ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி) என்ற தளம் உள்ளது. இது பல்வேறு தலைப்புகளில் 1,400 க்கும் மேற்பட்ட படிப்புகளின் இணையதள களஞ்சியத்தை வழங்குகிறது.
கர்மயோகி இயக்கம். வழங்கிய கட்டமைக்கப்பட்ட, நிலையான கற்றல் சசூழல் அமைப்பு இந்திய அரசின் செயல்திறனையிம் பொறுப்புணர்வையிம் மேம்படுத்தி, 2047 க்குள் "வளர்ச்சி அடைந்த பாரதம்" என்பதை நோக்கி நாட்டை வழிநடத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153370&ModuleId=3®=3&lang=1
*****
PLM/KV
(Release ID: 2068652)
Visitor Counter : 73