சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களுக்கான ஒரு மாத கால நிகழ்ச்சியான 'சமகம்' நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
25 OCT 2024 6:03PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) புதுதில்லியில் இன்று (25.10.2024) 'சமகம்' என்ற நிகழ்ச்சியின் மாபெரும் இறுதி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாத கால விரிவான தொடர் நடவடிக்கைகள், முயற்சிகளின் நிறைவை குறிப்பதாக இது அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறைக்கான மத்திய இணையமைச்சர்கள் திரு. ராம்தாஸ் அத்வாலே, திரு. பி.எல். வர்மா ஆகியோரும் பிற பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
திரு ராம்தாஸ் அத்வாலே மூத்த குடிமக்களின் பொருளாதார, சமூக அதிகாரமளித்தல் குறித்து உரையாற்றினார். அரசின் கொள்கைகளுக்கும், கள அமலாக்கத்துக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கு, அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தமது உரையில், தேசத்தின் மதிப்புகளையும் பாரம்பரியத்தையும் வடிவமைப்பதில் மூத்த குடிமக்களின் பங்கை எடுத்துரைத்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமின்றி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068173
***
TS/PLM/RS/DL
(Release ID: 2068212)
Visitor Counter : 50