சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 14-வது இன்ஸ்பா சர்வதேச மாநாட்டை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்
Posted On:
24 OCT 2024 5:16PM by PIB Chennai
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து நடத்திய, "பள்ளி உளவியலில் ஆராய்ச்சி வாய்ப்புகள்" குறித்த 14-வது இன்ஸ்பா சர்வதேச மாநாட்டை மத்திய தகவல் ஒலிபரப்பு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடு வரும் 26-ந் தேதி வரை நடைபெறும். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்) நிதியுதவியுடன் இந்த மாநாடு, பல்வேறு இனம், மொழி மற்றும் சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு கல்வி அமைப்புகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் உளவியல்-சமூக சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், " நமது மகத்தான தேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. உளவியல், ஒரு ஒழுக்கமாக, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நமது மாணவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பான மற்றும் வளர்ப்பு சூழலை உருவாக்குவதற்கான கூட்டு அர்ப்பணிப்புக்கு இந்த மாநாடு ஒரு சான்றாகும்” என்று கூறினார்.
"பள்ளி உளவியலில் ஆராய்ச்சி வாய்ப்புகள்" என்ற கருப்பொருள் இன்றைய உலகில் பொருத்தமானது மற்றும் அவசியமானது. நமது தற்போதைய சகாப்தத்தில், மனநலம் மற்றும் பள்ளி உளவியல் பற்றிய கருத்துக்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கியமானவையாகி விட்டன. கொவிட் -19 தொற்றுநோயின் சவாலான காலங்களில், இந்தியா உள்நாட்டில் தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை நம் மக்களுக்கு இலவசமாக வழங்கியதன் மூலம் தனது திறமையை நிரூபித்தது என்று அவர் தெரிவித்தார்.
"மாநாட்டின் நடவடிக்கைகளை நான் பார்த்தேன், ரஷ்யா, பிரான்ஸ், லண்டன், ஜப்பான், தாய்லாந்து, மொரீஷியஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருப்பதைக் கண்டேன். இந்த மூன்று நாள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து பெருமளவில் பிரதிநிதிகள் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி உளவியலில் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்த 14-வது இன்ஸ்பா சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைப்பதிலும், இன்ஸ்பாவின் ஐந்து புதிய புத்தகங்களை வெளியிடுவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் தலைமையுரையில், " உயர்கல்வி என்பது பட்டம் பெறுவது மட்டுமல்ல. அதன் உண்மையான மதிப்பு சமூகங்களை மேம்படுத்துவதற்கும் சமூக வளர்ச்சியை வளர்ப்பதற்கும் அதன் திறனில் உள்ளது. உயர்கல்வியின் பலன்களை பின்தங்கியவர்களுக்கு விரிவுபடுத்துவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்” என்றார்.
மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:
1. மாணவர் மனநல தலையீடுகளில் சிறந்த நடைமுறைகள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்களுக்கான பயிலரங்குகள்.
2. திருவாரூரைச் சேர்ந்த உள்ளூர் மாணவர்கள் உளவியல் நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறும் குழந்தைகள் பேரவை.
3. இன்ஸ்பா கல்வி சிறப்பு விருது மற்றும் டாக்டர் டி.ராஜேந்திரன் சிறந்த பள்ளி ஆலோசகர் விருது உள்பட பள்ளி உளவியலில் சிறப்பான பங்களிப்புகளைக் கொண்டாடும் விருது விழா.
புத்தக வெளியீடுகள்: தொடக்க விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, பள்ளி உளவியல் துறையில் பல அற்புதமான புத்தகங்கள் வெளியிடப்பட்டன:
தொடக்க விழாவில் பதிவாளர் பேராசிரியர் ஆர்.திருமுருகன் உட்பட பல்கலைக்கழகத்தின் நூலகர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
***
AD/PKV/RR/KR
(Release ID: 2067775)
Visitor Counter : 62