சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம்  (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகம் உலக தர நிர்ணய தினம் 2024 [மானக்  மஹோத்சவ்] நிகழ்ச்சியை இன்று வேலூரில்  நடத்தியது

Posted On: 22 OCT 2024 4:21PM by PIB Chennai

 

இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலகம், உலக தர நிர்ணய தின நிகழ்ச்சியை [மானக் மஹோத்சவ்] வேலூரில் இன்று நடத்தியது. உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடும் விழாவில் தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிஐஎஸ்-ன் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை அலுவலக இணை இயக்குநர் திரு அருண் புச்சகாயலா, வரவேற்புரை  வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று ISO, IEC மற்றும் ITU உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலக தர நினைவு தினத்தை கொண்டாடுகிறார்கள்.  சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு கௌரவப்படுத்தும் ஒரு வழிமுறையாக இது உள்ளது என்றார்.

இணை இயக்குநர் திரு ஜீவானந்தம் நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். உலக தர நிர்ணய தினத்தின் கருப்பொருளை அவர் கோடிட்டுக் காட்டினார். நீடித்த வளர்ச்சிக்கான பல்வேறு இலக்குகள் குறித்து பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்த அவர், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தரநிலைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை விளக்கினார்.

சென்னை கிளை அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு தினேஷ் ராஜகோபாலன், உலக தர நிர்ணய தின செய்திகளை வாசித்தார்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைவேந்தர் டாக்டர் காஞ்சனா பாஸ்கரன், வேலூர் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர் காஞ்சனா பாஸ்கரன் தது  உரையின் போது, உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடும் பிஐஎஸ்-ன் முயற்சிகளை பாராட்டினார்.

சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் பொது மேலாளர், திரு எம் கண்ணன் விருந்தினராகக் கலந்து கொண்டார். நீடித்த வளர்ச்சி இலக்குகளை சுட்டிக்காட்டி அவர் தனது உரையை முடித்தார்.

பின்னர் பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில், தர உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிஐஎஸ் திட்டங்களுக்கு தீவிர ஆதரவை வழங்கிய சுமார் 11 தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்களுக்கு,  பிஐஎஸ் விருதுகள் வழங்கப்பட்டது .

சென்னை கிளை அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு தினேஷ் ராஜகோபாலன், தரநிலைகளை மேம்படுத்துதல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் பிஐஎஸ் எடுத்த சமீபத்திய முயற்சிகள் குறித்து விளக்கினார்.

   

 

   

***

PKV/KV


(Release ID: 2067042) Visitor Counter : 64