கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத் தளபதிகள் மாநாடு நாளை தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 09 OCT 2024 3:16PM by PIB Chennai

2024-ம் ஆண்டிற்கான இரண்டாவது ராணுவத் தளபதிகளின் மாநாடு நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இருவிதமாகவும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டம் 2024 அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் கேங்டாக்கில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் 2024 அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது.

பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கேங்டாக்கில் நடைபெறும் மாநாட்டில் மூத்த அதிகாரிகளிடையே முக்கிய உரையாற்ற உள்ளார். அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும்  ராணுவத்தின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.

நாடு பல்வேறு பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சிக்கிமில் நாளை தொடங்கவுள்ள ராணுவ தளபதிகள் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. மூத்த தளபதிகளின் மாநாடு ராணுவத்தின் கள செயல்பாடுகளில் கவனம் செலுத்தும். தற்போதைய செயல்பாட்டு தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கும், முக்கியமான உத்திகள் குறித்து விவாதிப்பதற்கும், எதிர்கால திட்டங்களை வகுப்பதற்கும் இந்த மாநாடு  ஒரு தளமாக அமையும்.

நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் முதல் கட்ட மாநாட்டின் போது, முக்கியமான தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாகவும் ராணுவத்தின் போர் திறன்களை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

----

PLM/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2063676) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam