கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது

Posted On: 04 OCT 2024 5:30PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் பரவலாக பேசப்படும் இந்தோ - ஆரிய மொழியான மராத்தி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வளமான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கலாச்சார வெளிப்பாட்டுக்கும் தகவல் தொடர்புக்குமான ஒரு முக்கிய ஊடகமாக, மராத்தி  உள்ளது. அதன் மாறுபட்ட இலக்கிய பாரம்பரியத்தின் மூலம் அதன் மக்களின் தனித்துவமான மரபுகளையும் மதிப்புகளையும் பிரதிபலிக்கிறது. மத்திய அரசு மராத்திக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது மொழி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த அங்கீகாரம் மராத்தியின் விரிவான இலக்கிய பங்களிப்புகளை கௌரவிப்பது மட்டுமல்லாமல், அதன் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

மராத்தி மொழி பிரசீன மஹாராத்தி, மராஹத்தி, மகாராஷ்டிர பிரக்தா, அபபிரம்சா மராத்தி போன்ற மொழிகளிலிருந்து உருவானது.

மராத்தியில் அறியப்பட்ட ஆரம்பகால இலக்கியப் படைப்பு, கதாசப்தசதி ஆகும். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.

எண்ணற்ற கல்வெட்டுகள், செப்புத் தகடுகள், கையெழுத்துப் பிரதிகள்,  பழைய மத நூல்கள் (போத்திகள்) மராத்தியின் ஆழமான வரலாற்று வேர்களை நிரூபிக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக, ராஜாராம் சாஸ்திரி பகவத், எஸ்.வி.கேத்கர், மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்யாயன், டாக்டர் ஆர்.ஜி.பண்டார்கர் போன்ற அறிஞர்கள் மராத்தியின் பரிணாம வளர்ச்சியை மகாராஷ்டிர பிரகிருதத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

110 மில்லியன் மக்கள் தாய்மொழியாக மராத்தியைக் கொண்டுள்ளனர். உலகளவில் அதிகம் பேசப்படும் முதல் 15 மொழிகளில் ஒன்றாக இது உள்ளது.

அதன் வளமான மற்றும் பழமையான இலக்கிய பாரம்பரியத்தை அங்கீகரித்து, மத்திய அரசு மராத்திக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்து மராத்தியைப் பாதுகாப்பதிலும் புத்துயிர் பெறச் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

 ***

PLM/KPG/DL


(Release ID: 2062099) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi