சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தூய்மையே சேவை 2024-க்கு ஏற்ப மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு தொடக்கம்
Posted On:
03 OCT 2024 2:35PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம், தூய்மையே சேவை 2024 இயக்கத்தின்படி, பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, மெப்ஸ் நிர்வாக அலுவலக கட்டடத்தின் ‘அமைதி தோட்டம்’ வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மெப்ஸ் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. உடல் உழைப்பு நடவடிக்கைகள் வாயிலாக தூய்மை இலக்கு அலகுகளை நோக்கமாகக் கொண்டு இந்த திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி, புதிதாக கட்டப்பட்டுள்ள துர்கா நகர் நுழைவாயிலைத் திறந்துவைத்தார். இந்த நுழைவாயில் தொழிலாளர்கள் எளிதாக சென்று வருவதோடு, ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர் திரு பி நாராயணன் பேசுகையில், திடக்கழிவுகளை திறம்பட நிர்வகிப்பது, மெப்ஸ் வளாகத்தை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத பகுதியாக மாற்ற உதவும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மெப்ஸ் வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், “பழக்கவழக்கத் தூய்மை- தூய்மை கலாச்சார” உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
HZY4.jpg)
***
MM/AG/DL
(Release ID: 2061581)
Visitor Counter : 86