சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சுற்றுலா விரிவாக்கம்

Posted On: 03 OCT 2024 12:14PM by PIB Chennai

இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பிரமிக்கத்தக்க இடங்கள், வாய்ப்புகளுக்கான  செல்வத்தை வழங்குவதால், நாட்டின் சுற்றுலாத் துறை உலகளாவிய விருப்பமாக உருவாகி வருகிறது. பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியான, சுற்றுலாத் துறை, வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.

உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள சமீபத்திய TTDI 2024 அறிக்கையில், 119 நாடுகளில் இந்தியா 39-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு சுற்றுலாத் துறை ஒரு முக்கிய உந்துகோலாக மாறி வருகிறது.

2023-ம் ஆண்டில், இந்தியா 9.24 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை (FTAs) பதிவு செய்துள்ளது.

தேக்கோ அப்னா தேஷ் (இந்தியாவை காணுங்கள்) பிரஷாத், துடிப்பான கிராமத் திட்டம், ஸ்வதேஷ் 2.0 மற்றும் (பிராந்திய இணைப்புத் திட்டம்), உதான் உட்பட உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, உள்நாட்டு சுற்றுலாவில் இந்தியா நேர்மறையான பாதையைக் காட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ.7,000 கோடி) மதிப்புள்ள விரிவான சுற்றுலா உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/oct/doc2024103407001.pdf 

--------------

LKS/RS/KR


(Release ID: 2061508) Visitor Counter : 75


Read this release in: English , Urdu , Hindi , Gujarati